செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தம்

 

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தம்

சென்னை

நீர் வரத்து குறைவு காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டு உள்ளது. கடந்த வாரம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது. இதனால் நடப்பு ஆண்டு 2-வது முறையாக ஏரியில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக சென்னை நகரில் தாழ்வான வெள்ள நீர் சூழ்ந்துகொண்டதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 200 கனஅடியாக சரிவடைந்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தம்

இதனால் ஏரியின் நீர்மட்டமும் குறைந்து வந்தது. இந்த நிலையில் இன்று ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 22.53 அடியாகவும், மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 256 மில்லியன் கனஅடியாக உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 200 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டுள்ள நிலையில், ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக 100 கனஅடி நீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே செம்பரம்பாக்கம் ஏரியில நீர்திறப்பு நிறுத்தப்பட்டதால் குன்றத்தூர் – ஶ்ரீபெரும்புதூர் சாலையில் ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.