• April
    10
    Friday

Main Area

Main



எடப்பாடி படிச்சிருந்தா இப்படி நடந்திருக்குமா? சுர்ஜித் விவகாரத்தில் கொந்தளித்த பிக்பாஸ் மீரா மிதுன் வீடியோ !

மீரா மிதுன்
மீரா மிதுன்

தீபாவளி பண்டிகையை எல்லாம் விட்டுவிட்டு தமிழகம் முழுவதுமே சிறுவன் சுர்ஜித்துக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறது. ஒரு வேளை சாப்பிடாமல் இருந்தாலே தலைச்சுற்றி கீழே விழுகிறவர்களுக்கு மத்தியில் தண்ணீர் ஆகாரம் எதுவுமில்லாமல் நூறடி ஆழத்தில் தவித்து வரும் சிறுவனை எப்படியாவது காப்பாற்று என்று தமிழகம் முழுவதும் சிறுவர்களும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

surjith


தீயணைப்புத் துறையினர், மீட்புக் குழுவினர், தகவல் அறிந்த நாள் முதலே அதே இடத்தில் கண்கலங்கி நிற்கும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்று எந்த அரசியலும் இல்லாமல் சிறுவனைக் காப்பாற்ற வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் அனைவரும் ஈடுபட்டு வருகிறார்கள்.  கடினமாக பாறைப் பகுதியாக இருப்பதால், குழி தோண்டுவது பெரும் சவாலாகவே மீட்பு குழுவினருக்கு உள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான நடிகை மீரா மிதுன், குழந்தை மீட்புக் குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “குழந்தையை மீட்க தேவையான கருவியை முதல்வர் அண்டை மாநிலங்களிடமிருந்தாவது வாங்கியிருக்க வேண்டும். தமிழகத்தில் படித்தவர் முதல்வராக இருந்திருந்தால் மீட்பு பணி இப்படிதான் இருந்திருக்குமா? ஜெயலலிதா அம்மாவின் இழப்பை இப்போது உணர்கிறோம். முதல்வர் அவருடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி மீட்டிருக்க வேண்டும். முதல்வர் ஏன் நேரடியாக இவ்விவகாரத்தில் இதுவரை களமிறங்கவில்லை?” என்று தெரிவித்துள்ளார்.

 

2018 TopTamilNews. All rights reserved.