கொரோனா தொற்று உறுதியானதால் ஞானவேல்ராஜா இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை!

 

கொரோனா தொற்று உறுதியானதால் ஞானவேல்ராஜா இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை!

பண மோசடி வழக்கில், சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ஆகஸ்ட் 27வரை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது. 8 ஆம் தேதிக்குப் பின்னர் ஞானவேல்ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதன் காரணமாகவே ஆஜராக இயலவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் ஆரம்பித்து 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக துளசி மணிகண்டன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், நீதிமணி, மேனகா மற்றும் ஆனந்த் ஆகியோர் மீது ராமநாதபுரம் பஜார் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை விசாரிக்க ஞானவேல்ராஜாவுக்கு ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து, சம்மனுக்கு ஆஜராவதிலிருந்து விலக்குக் கேட்டு உயர் நீதிமன்றத்தில் ஞானவேல்ராஜா வழக்குத் தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிபதி, ஆகஸ்ட் 7 ஆம் தேதி ராமநாதபுரம் காவல் நிலையத்தில் ஞானவேல்ராஜா நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

கொரோனா தொற்று உறுதியானதால் ஞானவேல்ராஜா இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை!

இந்நிலையில் ஞானவேல்ராஜா தரப்பில் முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில்,” ஸ்டுடியோ கிரீன் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவத்தை நடத்தி வரும் நிலையில், இதுவரை 20க்கும் அதிகமாக படங்களை தயாரித்துள்ளேன். இந்நிலையில் மகாமுனி திரைப்படத்தை தருண் பிட்சர்ஸ்கு வழங்கிய நிலையில், அதன் ஒரு பங்குதாரரான நீதிமணிக்கு, மகாமுனி திரைப்படத்தின் திரையரங்க உரிமைக்காக 6 கோடியே 25 லட்ச ரூபாய் வழங்குவதாக ஒப்பந்தம் போடப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதுவரை 2 கோடியே 30 லட்ச ரூபாயை வழங்கிய நிலையில், மீதம் 3 கோடியே 95 லட்ச ரூபாயை வழங்க வேண்டும். இந்நிலையில் தவறுதலாக நீதிமணி மீதான பண மோசடி புகாரில் நான் தொடர்பு படுத்தப்பட்டுள்ளேன். ஆகவே, இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி, பாரதிதாசன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், மனுதாரர் ஆகஸ்ட் 7,8 ஆகிய தேதிகளிலேயே ஆஜரானார்.

கொரோனா தொற்று உறுதியானதால் ஞானவேல்ராஜா இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை!

அதன் பின்னர் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டது. அதற்கு மனுதாரர் தரப்பில், 2 நாட்கள் ஆஜராகி காவல்துறையினர் கேட்ட 66 கேள்விகளுக்கும் எழுத்துப் பூர்வமாக பதிலளிக்கப்பட்ட நிலையில், 8 ஆம் தேதிக்குப் பின்னர் கொரோனா தொற்று உறுதியானதன் காரணமாகவே ஆஜராக இயலவில்லை. இது குறித்து காவல்துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, திரைப்படம் வெளியிடுவது தொடர்பான திரையரங்க உரிமத்திற்காகவே, பணம் வழங்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் கூறப்படுகிறது. ஆகவே, எந்த நோக்கத்திற்காக பணம் வழங்கப்பட்டது? என இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் கூறியுள்ளனர் என கேள்வி எழுப்பிய நீதிபதி இது குறித்து உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதுவரை ஞானவேல்ராஜாவை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்தும் உத்தரவிட்டுள்ளார்.