• April
    06
    Monday

Main Area

Main



நடிகர் சூர்யாவுடன் கைக்கோர்க்கும் வெற்றிமாறன்! இதுதாங்க ட்விட்டர் ட்ரெண்ட்!!

சூர்யா
சூர்யா

நடிகர் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகும் படத்தின் பெயர் வாடிவாசல் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனந்த விகடனின் சினிமா விருதுகள் 2019 நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அப்போது சிறந்த படத்திற்கான விருதை அசுரன் படத்திற்காக இயக்குநர் வெற்றிமாறன் பெற்றார். அப்போது பேசிய அவர், தனது அடுத்தப்படம் சூர்யாவை வைத்துதான் இயக்கவுள்ளேன்.. அந்த படத்தின் பெயர் வாடிவாசல் என அறிவித்தார். இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும், ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

வாடிவாசல்

என்.ஜி.கே, காப்பான் படங்களை தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் சூரரைப் போற்று படத்தில் நடித்துவருகிறார். சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு பிறகு வாடிவாசலில் நடிகர் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

2018 TopTamilNews. All rights reserved.