Home சினிமா 'சூரரை போற்று' திரைப்படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகாது- சூர்யா

‘சூரரை போற்று’ திரைப்படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகாது- சூர்யா

இறுதிச்சுற்று படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் திரைப்படம் சூரரைப் போற்று. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, நடிகை அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராப் உட்பட பலர் நடித்துள்ளனர். சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஏர் டெக்கான் உரிமையாளர் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது வாழ்க்கை வரலாறு படமல்ல.

Image

இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சூரரைப் போற்று படத்தின் பின்னணி வேலைகள் இன்னும் முடியவில்லை என்றும், ரிலீஸ் குறித்த முக்கிய முடிவு அமேசான் வசம் இருப்பதால், அவர்கள் எடுப்பதே இறுதி முடிவு எனவும் நடிகர் சூர்யா அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

படத்தில் விமானப்படை தொடர்பான காட்சிகள் வருவதால் படத்தை வெளியிட இந்திய விமானப்படையிலிருந்து தடையில்லா சான்றிதழ் கிடைக்க வேண்டும் அதுவும் படம் தாமதமாக ரிலீஸ் ஆவதற்கான ஒரு காரணம் என்றும் விரைவில் படத்தின் ட்ரைலர் மற்றும் பல ஆச்சர்யங்களுடன் உங்களை சந்திக்கிறோம் என்றும் நடிகர் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிரடியாக குறைத்த எஸ்பிஐ!

கொரோனா ஊடரங்கு காரணமாக தொழில்கள் முடங்கியதுடன் , பலருக்கும் வேலை இழப்பு, தொழில் முடக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டு வருவாய் பாதிக்கப்பட்டது.இந்த நிலையில், வங்கிக் கடன் வாங்கியவர்களுக்கு 6 மாதங்கள்...

பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது? திருமாவளவன் பளீர்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி, தொகுதி பங்கீடுபோன்ற முக்கிய பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அதிமுக பாமகவுடனான...

எம்.ஜி.ஆர். வழி செல்லும் கமல்ஹாசன்!

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதி, மயிலாப்பூர் , திநகர் மற்றும் ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று அதிமுக,...

சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி! ஓவைசி அதிரடி

தமிழகத்தில் இஸ்லாமியர்களின் வாக்குகள் அதிமுக - திமுக என இருகட்சிகளுக்குமே சென்றாலும், முஸ்லீம்களின் வாக்குகள் பெரும்பாலும் திமுகவுக்கே சாதகமாக அமைந்து வருகின்றன. அதற்கு திமுகவுடன் உள்ள கூட்டணி கட்சிகளான மனிதநேய...
TopTamilNews