ட்விட்டரில் ட்ரெண்டாகும் #SureshRaina… வீரர்களுக்கு கொரோனா… ஐபிஎல் போட்டிகள் நடக்குமா?

 

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #SureshRaina… வீரர்களுக்கு கொரோனா… ஐபிஎல் போட்டிகள் நடக்குமா?

கொரொனாவால் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் மேட்ச், ஐக்கிய அமீரகத்தில் அடுத்த மாதம் 19-ம் தேதிதான் தொடங்குகிறது. போட்டியில் ஆடும் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மஹேந்திர சிங் தோனி உள்ளிட்ட வீரர்கள் சென்னையில் ஐந்து நாட்கள் பயிற்சி மேற்கொண்டனர். அதற்கு முன் கொரோனா பரிசோதனையும் எடுத்துக்கொண்டனர். அதன்பின் ஐக்கிய அமீரகம் புறப்பட்டனர்.

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #SureshRaina… வீரர்களுக்கு கொரோனா… ஐபிஎல் போட்டிகள் நடக்குமா?

அங்கு வீரர்கள் மற்றவர்களைச் சந்திப்பது முதல் பயிற்சி எடுப்பது வரை பலவித கட்டுபாட்டுகள் விதிக்கப்பட்டன. காரணம் கொரோனா நோய்த் தொற்று வீரர்களுக்குப் பரவிவிடக்கூடாது என்பதற்காகவே.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், எந்தெந்த வீரர்களுக்கு என அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் ஏதும் அறிவிக்கப்பட வில்லை. ஆயினும் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் அணியின் மேலாளருக்கு கொரோனா தொற்று இருந்ததாகவும் அதன் வழியே மற்ற வீரர்களுக்கு நோய்த் தொற்று பரவியதாகவும் சொல்லப்படுகிறது. என்றாலும் இது உறுதிபடுத்தப்பட்ட தகவல் இல்லை.

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #SureshRaina… வீரர்களுக்கு கொரோனா… ஐபிஎல் போட்டிகள் நடக்குமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா திடீரென்று அணியிலிருந்து விலகி நாடு திரும்பியுள்ளார். சுரேஷ் ரெய்னாவின் குடும்ப விஷயம் தொடர்பாக, தனிப்பட்ட காரணத்திற்காக போட்டியிலிருந்து விலகியதாக அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் ட்விட்டரில் #SureshRaina எனும் ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. அதில் சுரேஷ் ரெய்னா இல்லையெனில் அணியில் பேட்டிங் ஆர்டர் பாதிக்கப்படும் என்று சிலர் கவலைத் தெரிவிக்கின்றனர்.

இன்னும் சிலர் இப்படியான சூழலில் ஐபிஎல் போட்டி நடத்தபட வேண்டுமா… கேன்சல் செய்துவிடலாமே! என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #SureshRaina… வீரர்களுக்கு கொரோனா… ஐபிஎல் போட்டிகள் நடக்குமா?

ஐபிஎல் போட்டிகளின் போது வீரர்களிடையே தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படும் என்பதற்கு எந்தவித உத்திரவாதம் இல்லை. ஏனெனில், ஒரு விக்கெட் விழுந்தால் உடனே ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்தும் கை குலுக்கியும் வாழ்த்துவது வீரர்களின் இயல்பு. அதை அவர்களால் கைவிட முடியுமா என்பது சந்தேகமே.

இங்கிலாந்து – பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியின்போது விக்கெட் விழுந்தபோது இப்படித்தான் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்கள். எனவே, நோய்த் தொற்று ஒருவருக்கு இருந்தால் அது பலருக்கும் பரவ வாய்ப்பிருக்கிறது.

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #SureshRaina… வீரர்களுக்கு கொரோனா… ஐபிஎல் போட்டிகள் நடக்குமா?

நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டால் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். முக்கிய வீரர்கள் இப்படித் தனிமைப்படுத்த பட்டால் ஆட்டமும் சுவாரஸ்யமாக இருக்காது.

ஐபிஎல் போட்டி நடத்துவதற்கான முனைப்பில்தான் ஏற்பாட்டாளர்கள் இதுவரை இருக்கிறார்கள். ஆனால், இந்த அபாயச் சூழலில் போட்டியைத் தவிர்க்கச் சொல்லும் யோசனைகளும் ஆங்காங்கே முன்வைக்கப்படுகின்றன.

என்ன செய்யபோகிறது ஐபிஎல் நிர்வாகம் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.