’உங்க பந்து வீச்சில் விளையாட காத்திருக்கிறேன்’ சுரேஷ் ரெய்னா சொல்வது யாரை?

 

’உங்க பந்து வீச்சில் விளையாட காத்திருக்கிறேன்’ சுரேஷ் ரெய்னா சொல்வது யாரை?

சுரேஷ் ரெய்னா அற்புதமான பேட்ஸ்மேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர். அவர் 2020 ஐபிஎல் சீசனில் ஆடாதது பெரும் இழப்பு அணிக்கு. ஒருவேளை அவர் இருந்திருந்தால் சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்று அளவுக்காவது முன்னேறியிருக்கும். ஏனெனில், சென்ற சீசனில் மிடில் ஆர்டரில்தான் சென்னை அணி தடுமாறியது.

ரெய்னாவின் ஐபிஎல் கரியரில் 193 மேட்ச்கள் ஆடி, 5368 ரன்களைக் குவித்திருக்கிறார். பவுலிங்கில் 25 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடைசெய்யப்பட்ட காலம் தவிர மற்ற போட்டிகள் அனைத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவே ஆடியிருக்கிறார்.

’உங்க பந்து வீச்சில் விளையாட காத்திருக்கிறேன்’ சுரேஷ் ரெய்னா சொல்வது யாரை?

சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டுமே (2008-2015, 2018-2019) சுரேஷ் ரெய்னா 164 மேட்ச்களில் ஆடி, 4527 ரன்களைக் குவித்திருக்கிறார். 412 ஃபோர்களையும் 171 சிக்ஸர்களையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளாசியிருக்கிறார்.
இந்த முறை சுரேஷ் ரெய்னாவின் உறவினர் ஒருவரின் மர்மமான மரணத்தால் உடனே அவர் நாடு திரும்ப வேண்டியதாயிற்று. அதனால் அவரின் ஆட்டத்தை ரசிகர்கள் பார்க்க முடியவில்லை.

இப்போது சய்யது முஷ்டாக் தொடருக்காக ஆட விருக்கிறார் சுரேஷ் ரெய்னா. அவர் ஒரு பவுலரின் பந்துகளை எதிர்கொள்ள ஆவலோடு இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். அவர் யார் என்றால் ஸ்ரீசாந்த்.

’உங்க பந்து வீச்சில் விளையாட காத்திருக்கிறேன்’ சுரேஷ் ரெய்னா சொல்வது யாரை?

இந்திய அணியில் ஒரு காலகட்டத்தில் கலக்கியவர் ஸ்ரீசாந்த். ஆக்ரோஷமான பந்து வீச்சை மட்டுமல்ல, ஆடுகளத்தில் ஆவேசத்தோடு ஆடக்கூடியவர். இளம் வயதில் பலரின் பாராட்டுகளைப் பெற்றவர். ஆனால், 2013 ஆம் ஆண்டில் அவர் மீது மேட்ச் ஃபிக்ஸிங் புகார் வந்தது. ஸ்ரீசாந்த் உடனே மறுத்தார். ஆனால், அவருக்கு தடை விதித்தது கிரிக்கெட் வாரியம். ஆனாலும் அந்த வழக்கை நீதி மன்றத்தில் சந்தித்தார் ஸ்ரீசாந்த். சமீபத்தில் அந்தப் புகாரில் ஸ்ரீசாந்த் குற்றம் செய்ய வில்லை என்ற தீர்ப்பு வந்தது. அதனால், சய்யத் முஷ்டாக் தொடருக்காக கேரளா அணியில் இடம்பிடித்திருக்கிறார்.

ஸ்ரீசாந்த் பவுலிங்கை எதிர்கொள்ளத்தான் ஆவலாக இருக்கிறார் சின்ன தல சுரேஷ் ரெய்னா. போட்டி களம் இன்னும் ஆக்ரோஷமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.