இதனால்தான் சுரேஷ் ரெய்னா CSK வுக்கு வேணும் – #Raina

 

இதனால்தான் சுரேஷ் ரெய்னா CSK வுக்கு வேணும் – #Raina

ஐபிஎல் 2020 சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு பெரும் வருத்தமான அனுபவங்களே நிறைந்தது. ஆமாம். மூன்று முறை ஐபிஎல் சாம்பியன் வென்ற அணி. நான்கு முறை ரன்னர் அப் ஆன அணி. அப்படிப்பட்ட அணி லீக் ரவுண்டிலேயே வெளியேறியது.

CSK வின் தோல்விக்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சரியாக அமையாதது என்றே சொல்லப்பட்டது. குறிப்பாக சுரேஷ் ரெய்னா இல்லாததது பெரும் பலவீனம்.

இதனால்தான் சுரேஷ் ரெய்னா CSK வுக்கு வேணும் – #Raina

சுரேஷ் ரெய்னாவுக்கும் CSK அணிக்கும் இடையே பிரச்சனை இருந்த நிலையில், 2021 ஐபிஎல் அணியிலிருந்து ரெய்னா விடுவிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால், தோனி விட வில்லை. ரெய்னாவை அணிக்குள் தக்க வைத்துக்கொண்டார்.

சுரேஷ் ரெய்னா CSK க்கு அவசியம் தேவை. ஏனென்றால், CSKவுக்கு பல கட்டங்களில் முக்கியமான பங்களிப்புகளை ரெய்னா நிகழ்த்தியிருக்கிறார்.

ரெய்னாவின் ஐபிஎல் கரியரில் 193 மேட்ச்கள் ஆடி, 5368 ரன்களைக் குவித்திருக்கிறார். பவுலிங்கில் 25 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடைசெய்யப்பட்ட காலம் தவிர மற்ற போட்டிகள் அனைத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவே ஆடியிருக்கிறார்.

இதனால்தான் சுரேஷ் ரெய்னா CSK வுக்கு வேணும் – #Raina

சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டுமே (2008-2015, 2018-2019) சுரேஷ் ரெய்னா 164 மேட்ச்களில் ஆடி, 4527 ரன்களைக் குவித்திருக்கிறார். 412 ஃபோர்களையும் 171 சிக்ஸர்களையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளாசியிருக்கிறார்.

இன்றைய தேதி வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிக ரன்கள் எடுத்த வீரர் சுரேஷ் ரெய்னாவே. 4527 ரன்கள். இவருக்கு அடுத்த நிலையில்தான் தோனி இருக்கிறார். தோனியின் ரன்கள் 4,058.

CSKவுக்காக அரை சதங்கள் அதிகம் அடித்திருப்பதும் சுரேஷ் ரெய்னாதான். மொத்தம் 32 அரைசதங்கள். அடுத்த நிலையில் உள்ள தோனி 21 அரை சதங்கள்.

இதனால்தான் சுரேஷ் ரெய்னா CSK வுக்கு வேணும் – #Raina

CSKக்காக அதிக சிக்ஸர்கள் விளாசியதில் ரெய்னா இரண்டாம் இடம் 171 சிக்ஸர்கள். 186 சிக்ஸர்களோடு தோனி முதல் இடத்தில். பவுண்ட்ரி விளாசியதில் ரெய்னாவுக்கே முதல் இடம். மொத்தம்412 பவுண்ட்ரிகள். தோனியின் கணக்கு 280.

இன்னொரு சுவாரஸ்யமும் உண்டு. CSK ஆடுகையில் டக் அவுட் (0 ரன்னில்) ஆட்டமிழந்தது ரெய்னாதான். இதுவரை 8 முறை டக் அவுட்டாகியிருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிக போட்டிகள் ஆடிய இரண்டாம் வீரர் சுரேஷ் ரெய்னாதான். மொத்தம் 164 மேட்ச்கள். 2020 ஐபிஎல் சீசனில் ரெய்னா ஆடியிருந்தால் முதல் வீரராக நீடித்திருப்பார். அதிக கேட்ச் பிடித்த பீல்டர் எனும் பெருமையும் சுரேஷ் ரெய்னாவுக்கே. அவர் இந்த அணிக்காக பிடித்த கேட்ச் 91.