இந்தியாவின் X Factor சூறாவளி ரிஷப் பண்ட்டுக்கு கொரோனா – அதிர்ச்சியில் கேப்டன் கோலி!

 

இந்தியாவின் X Factor சூறாவளி ரிஷப் பண்ட்டுக்கு கொரோனா – அதிர்ச்சியில் கேப்டன் கோலி!

கொரோனா காரணமாக விளையாட்டுப் போட்டிகளின் வடிவமே மாறியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். கொரோனா அச்சுறுத்தலால் பல்வேறு கட்டுப்பாடுகளை மீறி அடுத்தடுத்து தொடர்களில் ஒரே அணியைக் கொண்டு விளையாட முடியாது என்ற நிலை வந்திருக்கிறது. இதனால் அனைத்து நாடுகளும் standby, அதாவது ஸ்டெப்னி அணிகளையும் வைத்திருக்கின்றன. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐயும் இதே முறையைக் கையாண்டியிருக்கிறது.

இந்தியாவின் X Factor சூறாவளி ரிஷப் பண்ட்டுக்கு கொரோனா – அதிர்ச்சியில் கேப்டன் கோலி!

அதன்படி மூத்த வீரர்களைக் கொண்ட ஒரு அணி ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. சில மூத்த வீரர்களும் பல இளம் வீரர்களும் அடங்கிய மற்றொரு அணி இம்மாதம் இங்கிலாந்து செல்கிறது. விராட் கோலி தலைமையில் 23 வீரர்கள் செல்கின்றனர். தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கடும் கட்டுப்பாடுகளுடன் இங்கிலாந்து சென்றனர். அங்கு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்தியாவின் X Factor சூறாவளி ரிஷப் பண்ட்டுக்கு கொரோனா – அதிர்ச்சியில் கேப்டன் கோலி!

வீரர்களுக்கு பரிசோதனை செய்ததில் இந்தியாவின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தகவலை பிசிசிஐ வெளிப்படையாகக் கூறவில்லை. ஆனால் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அவர் கடந்த 8 நாட்களாக தனிமைப்படுத்தலில் இருப்பதாகவும் மட்டும் பிசிசிஐ தெரிவித்தது. அந்த வீரருக்கு அறிகுறியற்ற கொரோனா தொற்று இருப்பதாகவும், அவருடன் வேறெந்த வீரர்களும் தொடர்பில் இல்லை எனவும் கூறியது.

முன்னாள் இந்திய வீரர்கள் ஹர்பஜன், ரெய்னா ஆகியோரின் ட்வீட்கள் தான் அந்த வீரர் ரிஷப் பண்ட் என உறுதிப்படுத்த வைத்துள்ளது. அவர்கள் ரிஷப் பண்ட் நலம்பெற ட்விட்டரில் வாழ்த்தியுள்ளனர். எந்த நேரத்திலும் போட்டியின் முடிவை மாற்றக்கூடிய X Factor வீரர் பண்ட். அவர் இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவு தான். இவர் பயிற்சி போட்டிகளில் கலந்துகொள்ளாவிட்டாலும், ஆகஸ்ட் 4ஆம் தேதி தான் டெஸ்ட் போட்டி என்பதால் அதில் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது. மே 13ஆம் தேதி தான் தனது முதல் தடுப்பூசி டோஸை பண்ட் போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.