’அவர் அப்பா மாதிரி.. அவர் என் பையன் மாதிரி’ சென்னை சூப்பர் கிங்ஸ் டீமில் பாச மழை

’அவர் அப்பா மாதிரி.. அவர் என் பையன் மாதிரி’ சென்னை சூப்பர் கிங்ஸ் டீமில் பாச மழை

தொடர் பிரச்னைகளாக இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குள் பாச மழை பொழிய ஆரம்பித்திருக்கிறது.

தோனி ‘தல’ என்றால், ’சின்ன தல’ சுரேஷ் ரெய்னா. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்கம் முதலே இருக்கும் வீரர் ரெய்னா. எப்போதும் ரெய்னாவை சிஎஸ்கேவும் விட்டுக்கொடுத்தது இல்லை. அதற்கு ஏற்ப ஐபிஎல் என்றால் வெறி பிடித்ததைப் போல ரன் மிஷினாகி விடுவார் ரெய்னா.

’அவர் அப்பா மாதிரி.. அவர் என் பையன் மாதிரி’ சென்னை சூப்பர் கிங்ஸ் டீமில் பாச மழை

ஐபிஎல் 2020 க்காக முதல்நபராகச் சென்னை பயிற்சிக்கு வந்தார். தோனி உள்ளிட்ட வீரர்களோடு உற்சாகமாக பயிற்சி எடுத்தார்.  ஐக்கிய அமீரகத்திற்கும் மகிழ்ச்சியோடு புறப்பட்டுச் சென்றார். ஆனால், திடீரென்று இந்தியா திரும்பிவிட்டார். ரெய்னாவின் குடும்ப பிரச்னை காரணமாகவே அவர் நாடு திரும்பினார் என்று கூறப்பட்டது.

அதன்பின், அவருக்கு ஒதுக்கப்பட்ட அறை தொடர்பாக அதிருப்தி அடைந்தார் என்று காரணம் செல்லப்படுகிறது. கேப்டன் தோனியுடன் கருத்து மோதலால்தான் விலகினார் என்றும் சொல்லப்படுகிறது.

’அவர் அப்பா மாதிரி.. அவர் என் பையன் மாதிரி’ சென்னை சூப்பர் கிங்ஸ் டீமில் பாச மழை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் மெட்ராஸ் சிமெண்ட்ஸ் என்.சீனிவாசன், ‘தலைக்கணம் மிகுந்துவிட்டது’ என்று பெயர் குறிப்பிடாமல் ரெய்னாவைப் பற்றி சொல்லியிருக்கிறார். மேலும், ரெய்னா இழந்ததைப் பற்றி நன்கு உணர்ந்திருப்பார் என்று தெரிவித்திருக்கிறார்.

இதனால் இனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரெய்னா நீடிப்பாரா என்பதே சந்தேகமாக இருந்தது. ஆனால், ரெய்னா, தனது குடும்பத்தில் நடந்த படுகொலைகளும் சிகிச்சையில் இருக்கும் அத்தையைப் பார்த்துக்கொள்ளும் பொருட்டே இந்தியா வந்ததாகத் தெளிவாகக் குறிப்பிட்டு ட்விட் பண்ணியிருந்தார்.

’அவர் அப்பா மாதிரி.. அவர் என் பையன் மாதிரி’ சென்னை சூப்பர் கிங்ஸ் டீமில் பாச மழை

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் சீனிவாசன் என் தந்தையைப் போன்றவர் என்று சுரேஷ் ரெய்னா உருக்கமாகப் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் அணி உரிமையாளர் சீனிவாசனும், ‘என் பையனைப் போலத்தான் ரெய்னாவை நடத்தினேன். அவர் மீண்டும் அணியில் விளையாடுவதை கேப்டனும் நிர்வாகமும்தான் முடிவு செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

’அவர் அப்பா மாதிரி.. அவர் என் பையன் மாதிரி’ சென்னை சூப்பர் கிங்ஸ் டீமில் பாச மழை

தகவல் தொடர்பில் இருந்த பிழை, பெரும் பிரச்னையையே கொண்டு வந்துவிட்டது. ஆனால், சூழலை ரெய்னா விளக்கியதும் பாச மழை பொழிகிறது சிஎஸ்கே அணிக்குள்.