வலிமை படம் அப்டேட்; அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள அறிக்கை

 

வலிமை படம் அப்டேட்; அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள அறிக்கை

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹெச் வினோத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தையும் தயாரிப்பாளர் போனி கபூரே  தயாரிக்கிறார்.  தல- இன் 60 ஆவது படமான இந்த படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித் இரண்டு தோற்றங்களில் நடிக்க இருப்பதாகவும், அதில் ஒன்று போலீஸ் கதாபாத்திரம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படம் எப்போது வருமென ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

வலிமை படம் அப்டேட்; அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள அறிக்கை

இந்நிலையில் நடிகர் அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில், “வலிமை படத்தின் அப்டேட் கேட்டுக் கொண்டு இருக்கும் ரசிகர்களுக்கு வணக்கம்… படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட காயங்களை கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கும் திரு அஜித் குமார் அவர்களும், அனுபவமிக்க தயாரிப்பாளருமான திரு போனி கபூர் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து “வலிமை” படத்தின் அப்டேட் குறித்து முடிவெடுத்து தகுந்த நேரத்தில் வெளியிடுவார்கள். முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும். அவர்களது முடிவுக்கு மதிப்பு தரவும்” எனக் கூறினார்.