பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் கொடுத்த முத்தங்கள் – சுரேஷ் சக்கரவர்த்தி இன்ஸ்டா அப்டேட்

 

பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் கொடுத்த முத்தங்கள் – சுரேஷ் சக்கரவர்த்தி இன்ஸ்டா அப்டேட்

பிக்பாஸ் சீசன் 4 முடிவடைந்து விட்டது. இந்த சீசனின் வெற்றியாளராக ஆரி டைட்டிலை வென்றார். இரண்டாம் இடம் பாலாவுக்கு. மூன்றாம் இடம் ரியோ, நான்காம் இடம் ரம்யா, ஐந்தாம் இடம் சோம் சேகருக்கு.

இறுதி நாள் நிகழ்ச்சி 6 மணி நேரத்திற்கு ஒளிபரப்பப்பட்டது. அதில் இறுதிப்போட்டியில் இல்லாத மற்ற போட்டியாளர்களின் நடனங்கள், பாடல்கள் இடம்பெற்றன. அதில் கலந்துகொள்ள வந்த சகப் போட்டியாளர்கள் போட்டோக்களாக எடுத்துத் தள்ளியுள்ளனர்.

பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் கொடுத்த முத்தங்கள் – சுரேஷ் சக்கரவர்த்தி இன்ஸ்டா அப்டேட்

அவற்றை சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றன. இந்த சீசனில் சண்டை கோழியாகப் பார்க்கப்பட்டவர் சுரேஷ் சக்கரவர்த்தி. அவர் அனிதா, ஷனம் எனப் பலரிடமும் சண்டை வளர்த்து நிகழ்ச்சியைப் பரபரப்பாக்கினார். ஆனால், குறைவான வாரங்களே பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தார்.

பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் கொடுத்த முத்தங்கள் – சுரேஷ் சக்கரவர்த்தி இன்ஸ்டா அப்டேட்

நிகழ்ச்சியில் சண்டைக்கோழியாக இருந்தாலும், வெளியே வந்ததும் அங்கிருந்த போட்டியாளர்களை ஒருங்கினைத்து சந்திப்பதில் ஆர்வமாக இருந்தார். அந்தப் போட்டோக்கள் ஏற்கெனவே வெளியாகியிருந்தது. சமீபமாக சுரேஷ் சக்கரவர்த்தி சகப்போட்டியாளர்களிடம் பெற்ற முத்த போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அது அவரின் ஃபாலோயர்ஸ் லைக்குகளால் நிரம்பி வருகிறது.

பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் கொடுத்த முத்தங்கள் – சுரேஷ் சக்கரவர்த்தி இன்ஸ்டா அப்டேட்

சுரேஷ் சக்கரவத்தி இளம் ஓவியர் ஒரு பரிசு ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அந்தப் பரிசைத் திறந்து பார்க்கையில் சுரேஷ் நிஜமாகவே ஆச்சர்யப்பட்டு போனார். அதில் சுரேஷ் சக்கரவர்த்தியை தத்ரூபமாக கோட்டோவியத்தில் வரைந்திருந்தார் அந்த ஓவியர். அதைப் பெருமையுடன் தனது இன்ஸ்ட்ரா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சுரேஷ் சக்கரவர்த்தி.