பக்தர்கள் கூட்டமின்றி மருதமலையில் சூரசம்ஹாரம்!

 

பக்தர்கள் கூட்டமின்றி மருதமலையில் சூரசம்ஹாரம்!

கோவை

கொரோனா அச்சம் காரணமாக திருக்கோவில்களில் மக்கள் கூட்டம் இன்றி வழிபாடு நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. குடமுழுக்கு உள்ளிட்ட வழிபாடுகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இன்று முருக பெருமானுக்கு உகந்த முக்கிய வழிபாடான சூரசம்ஹார நிகழ்ச்சி முருகன் கோயில்களில் நடைபெற்று வருகின்றன.

பக்தர்கள் கூட்டமின்றி மருதமலையில் சூரசம்ஹாரம்!

இந்த நிகழ்ச்சிகளில் மக்கள் கலந்து கொள்ள அரசு அனுமதி அளிக்காத நிலையில், பக்தர்கள் கூட்டமின்றி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் முக்கிய வழிபாட்டுதலமும், அறுபடை வீடுகளில், ஏழாம் படை வீடாக கருதப்படும் சுப்பிரமணியசுவாமி சூரசம்ஹாரம் விழா பக்தர்கள் இன்றி நிறைவடைந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வேள்வி மாதத்துடன் பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டு கந்த சஷ்டி விரதத்தை தொடங்கினர். தொடர்ந்து ஆறாவது நாளான இன்று சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இதையொட்டி இன்று காலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வந்தகொண்டிருந்த நிலையில், கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

பக்தர்கள் கூட்டமின்றி மருதமலையில் சூரசம்ஹாரம்!

முன்னதாக அதிகாலையில், மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடு, ஆட்டுக்கிடாய் வாகனத்திலும் , வெள்ளை குதிரை வாகன ஊர்வலங்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நாளை நடைபெற உள்ள, திருக்கல்யாணம் நிகழ்ச்சியிலும் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு பின்னர் கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது