அரசு குடியிருப்பை காலி செய்ய முடியாது… சூரப்பா கறார்!

 

அரசு குடியிருப்பை காலி செய்ய முடியாது… சூரப்பா கறார்!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் பதவிக் காலம் முடிந்துவிட்டது. பதவியில் இருந்த போது ரூபாய். 250 கோடி ஊழல் செய்ததாக அவர் மீது புகார்கள் குவிந்தன. அந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்த, கலையரசன் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. முதற்கட்ட விசாரணை நடத்திய கலையரசன் குழு, சூரப்பா மீதான புகார்களுக்கு முகாந்திரம் இருப்பதாக தெரிவித்திருந்தது.

அரசு குடியிருப்பை காலி செய்ய முடியாது… சூரப்பா கறார்!

இதையடுத்து, சூரப்பா மீதான முறைகேடு குறித்து 80% விசாரணை நிறைவடைந்து இருப்பதாகவும் அவர் எங்கு சென்றாலும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், ஊழல் புகார்கள் குறித்து சூரப்பா முறையான பதில் அளிக்காவிடில் அவரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தப்படும் என்றும் கலையரசன் குழு தெரிவித்திருந்தது. இதனிடையே, பதவிக்காலம் நிறைவடைந்ததால் அரசு இல்லத்தை காலி செய்யுமாறு சூரப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அரசு குடியிருப்பை காலி செய்ய முடியாது… சூரப்பா கறார்!

இந்த நிலையில், அரசு இல்லத்தை காலி செய்ய முடியாது என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே துணைவேந்தர்களாக இருந்தவர்கள் சில மாதங்கள் வசித்த பிறகு தான் காலி செய்தனர். தனிப்பட்ட காரணங்களுக்காக சென்னையில் தங்கி இருக்க வேண்டி இருப்பதால் 2 மாதங்களுக்குள் வீட்டை காலி செய்ய முடியாது என்று அவர் கூறியுள்ளார்.