18 வயதாகிட்டா? அப்ப விரும்பிய மதத்தை தேர்வு செய்யலாம்- உச்சநீதிமன்றம்

 

18 வயதாகிட்டா? அப்ப விரும்பிய மதத்தை தேர்வு செய்யலாம்- உச்சநீதிமன்றம்

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தங்கள் விரும்பிய மதத்தை தேர்வு செய்ய உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாஜக நிர்வாகியும், வழக்கறிஞருமான அஷ்வினி உபாத்யாய, உச்ச நீதிமின்றத்தில் மதமாற்றம், சூனியம் போன்றவற்றிற்கு தடை விதிக்கக்கோரி மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ”அரசியல் சட்டத்தின் முக்கிய அம்சமாக கருதப்படுவது மதச்சார்பின்மை. ஆனால், பொருள் மற்றும் பணம் கொடுத்து மதம் மாற்றுவது, மிரட்டி மதம் மாற்றுவது போன்ற செயல்கள் இந்தியாவில் அரங்கேறி கொண்டிருக்கிறது. இது அரசியல் சட்டத்தின், 14, 21, 25 ஆகிய பிரிவுகளுக்கு எதிரானது. இதுபோன்று மதமாற்றத்தை கட்டாயப்படுத்துவோருக்கும், சூனியம் போன்ற மத நம்பிக்கையை ஏற்படுத்துவோருக்கும் 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க சட்டம் இயற்ற வேண்டும்” என கோரியிருந்தார்.

18 வயதாகிட்டா? அப்ப விரும்பிய மதத்தை தேர்வு செய்யலாம்- உச்சநீதிமன்றம்

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், 18 வயதிற்கு மேற்பட்ட ஒருவரை தனது மதத்தை தேர்வு செய்ய அனுமதிக்க முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை. எனவே 18 வயது நிரம்பியவர்கள் விரும்பிய மதத்திற்கு மாற உரிமை உண்டு. அவரவர் விரும்பும் மதத்தை தேர்வு செய்து கொள்ளலாம் என கருத்து தெரிவித்தனர். மேலும் சூனியம் குறித்தெல்லாம் கருத்து தெரிவிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.