மத்திய அரசின் கருத்துக்கு மாறாக குரல் கொடுப்பது தேசத்துரோம்: உச்சநீதிமன்றம்

 

மத்திய அரசின் கருத்துக்கு மாறாக குரல் கொடுப்பது தேசத்துரோம்: உச்சநீதிமன்றம்

மத்திய அரசின் கருத்துக்கு மாறாக குரல் கொடுப்பதும், எதிர்ப்பை தெரிவிப்பதும் தேசத்துரோக குற்றம் ஆகாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ல் மத்திய அரசு ரத்து செய்து மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு அம்மாநில தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, சீனா, பாகிஸ்தான் உதவியுடன் காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை வழங்க வைப்போம் என பேசி கண்டனம் தெரிவித்தார்.

மத்திய அரசின் கருத்துக்கு மாறாக குரல் கொடுப்பது தேசத்துரோம்: உச்சநீதிமன்றம்

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. அதில் ஒரு அரசியல் கட்சி தலைவராக இருந்து கொண்டு நாட்டுக்கு விரோதமாக பேசுகிறார். இது தேசத் துரோகம். அவரது எம்.பி. பதவியை பறிக்க வேண்டும் என கூறப்பட்டது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் , அரசின் கருத்துக்கு எதிராக குரல் எழுப்புவதும், மாறுபட்ட கருத்து தெரிவிப்பதும் தேசத் துரோக குற்றம் ஆகாது. பரூக் அப்துல்லா பேசியதற்கான போதிய ஆதராங்களை மனு தாரர் தாக்கல் செய்யவில்லை.எனவே இந்த மனவை தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.