பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரைக்கு தடை.. உத்தரவை மாற்றக்கோரும் மனுக்கள் மீது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

பூரி ஜெகந்நாதர்  கோயில் ரத யாத்திரைக்கு  தடை.. உத்தரவை மாற்றக்கோரும் மனுக்கள் மீது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரைக்கு தடை விதித்த உச்ச நீதிமன்ற உத்தரவை மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட உத்தரவை மாற்றக்கோரி தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி கொண்ட அமர்வு இன்று விசாரணை செய்கிறது. உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ். ரவீந்திர பாட் உள்ளடக்கிய அமர்வு இன்று காலை 11 மணிக்கு விசாரணை செய்கிறது.

பூரி ஜெகந்நாதர்  கோயில் ரத யாத்திரைக்கு  தடை.. உத்தரவை மாற்றக்கோரும் மனுக்கள் மீது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

ஒடிசா மாநிலம் பூரி கடற்கரை நகரத்தில் அமைந்துள்ள பிரபல வைணவ தலம் பூரி ஜெகந்நாதர் கோயில். இந்த கோயில் மூலவர்களான ஜெகந்நாதர் , பலபத்திரர் மற்றும் சுபத்திரை தனித்தனியாக 3 தேர்களில் ஏறி ரத வீதிகளில் ஊர்வலம் வரும் நிகழ்வான ரத யாத்திரை திருவிழா ஆண்டு தோறும் 10 முதல் 12 நாட்கள் நடைபெறும். வரலாற்று சிறப்பு மிக்க ரதயாத்திரை திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு வரும் 23ம் தேதி முதல் ரத யாத்திரை விழா தொடங்க வேண்டும். ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு திருவிழா நடைபெறுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அண்மையில் மத்திய உள்துறை அமைச்சகம் மத வழிபாட்டு தலங்களை மீண்டும் திறக்க அனுமதி அளித்தது. இதனால் புரி ஜெகன்நாதர் கோயில் தேர் கட்டும் பணிகளை தொடங்க ஒடிசா அரசு அனுமதி அளித்தது.

பூரி ஜெகந்நாதர்  கோயில் ரத யாத்திரைக்கு  தடை.. உத்தரவை மாற்றக்கோரும் மனுக்கள் மீது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

இந்த சூழ்நிலையில் பூரி ஜெகந்நாதர் கோயில் ரதயாத்திரை இந்த ஆண்டு அனுமதித்தால் தொற்று நோயான கொரோனா வைரஸ் பேரழிவு பரவலை ஏற்படுத்தும். அதனால் இந்த ஆண்டு ரதயாத்திரைக்கு தடை அல்ல ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு அமைப்பு மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் பூரி ஜெகந்நாதர் கோயில் ரதயாத்திரைக்கு தடை விதித்தது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே உத்தரவு பிறப்பிக்கும்போது, நாங்கள் ரத யாத்திரையை அனுமதித்தால் பகவான் ஜெகந்நாதர் எங்களை மன்னிக்க மாட்டார் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகுதான் ரத யாத்திரைக்கு தடை விதித்ததை மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.