Home இந்தியா "வேண்டப்பட்டவர்களை நீதிபதிகளாக நியமித்தால் நாங்கள் எதற்கு?" - மத்திய அரசை விளாசிய சுப்ரீம் கோர்ட்!

“வேண்டப்பட்டவர்களை நீதிபதிகளாக நியமித்தால் நாங்கள் எதற்கு?” – மத்திய அரசை விளாசிய சுப்ரீம் கோர்ட்!

நாடு முழுவதும் தீர்ப்பாயங்கள், மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களில் நீதிபதிகள், தொழில்நுட்ப உறுப்பினர்கள் நியமிக்கப்படாமல் 250க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருக்கின்றன. இந்தத் தீர்ப்பாயங்களில் நீதிபதிகளை நியமிக்கக் கோரி பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த முறை விசாரணையின்போது மூன்று நீதிபதிகளும் மத்திய அரசைக் கடுமையாகச் சாடினர்.

"வேண்டப்பட்டவர்களை நீதிபதிகளாக நியமித்தால் நாங்கள் எதற்கு?" - மத்திய அரசை விளாசிய சுப்ரீம் கோர்ட்!
Why has a PIL been filed in Supreme Court against PM Narendra Modi

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்த தலைமை நீதிபதி ரமணா, “தீர்ப்பாயங்களின் தலைமைப் பதவிக்கு நியமிக்க தேர்வுக்குழு பலரின் பெயர்களைப் பரிந்துரை செய்திருக்கிறது. அதில் தங்களுக்கு வேண்டியவர்களை மட்டும் மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. மற்றவர்களைக் காத்திருப்பு பட்டியலில் வைத்துள்ளது. என் தலைமையிலான தேர்வுக்குழு10 தொழில்நுட்ப உறுப்பினர்கள், 9 நீதிபதிகளைத் தேர்வுசெய்து பரிந்துரைத்தது.

Supreme Court Directs To Constitute National Tribunal Commission For  Appointments To Tribunals, Lawyers With 10Yrs Practice Eligible For  Appointment As Judicial Members

அதில் 3 பேரை மட்டுமே மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. சட்டத்துறையில் தேர்வுக்குழுப் பட்டியலை புறக்கணிக்கவும், காத்திருப்பில் வைக்கவும் முடியாது. எந்த அடிப்படையில் மத்திய அரசு நியமிக்கிறது” என்று கேட்டார். அதேபோல நீதிபதி சந்திரசூட் கூறுகையில், “கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் தலைமைப் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. ஒரு வங்கி கடன் செலுத்தாத வாடிக்கையாளரின் வீட்டையோ அல்லது தொழிற்சாலையையோ ஜப்தி செய்ய முயன்றால், தீர்ப்பாயத்தில் உத்தரவு பிறப்பிக்க யாருமில்லை. உயர் நீதிமன்றம் இதுபோன்ற வழக்கை விசாரிக்க மறுக்கிறது. நீதி கிடைக்க வழியில்லை” என்றார் காட்டமாக.

Who is Justice N V Ramana?
என்வி ரமணா

இதற்குப் பிறகு உத்தரவு பிறப்பித்த தலைமை நீதிபதி அமர்வு, “உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி தலைமையிலான தேர்வுக் குழு தீர்ப்பாயங்களுக்குத் தலைமைப் பதவிக்கு ஆட்களைத் தேர்வு செய்து பட்டியலிட்டும் அதை நிரப்பாமல் மத்திய அரசு இருக்கிறது. இதனால் எங்களுக்கு நேரம் வீணாகியுள்ளது. ஆகவே அடுத்த 2 வாரங்களுக்குள் காலியாக இருக்கும் தீர்ப்பாயங்களுக்கு நீதிபதிகளை நியமிக்க வேண்டும். இல்லையென்றால் நாங்களே உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கும். அடுத்த விசாரணைக்கு வரும்போது நியமன ஆணைகளோடு வாருங்கள். இல்லையெனில் நியமிக்கப்படாததற்கான காரணத்தோடு வாருங்கள்” என்றனர்.

"வேண்டப்பட்டவர்களை நீதிபதிகளாக நியமித்தால் நாங்கள் எதற்கு?" - மத்திய அரசை விளாசிய சுப்ரீம் கோர்ட்!

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

அரசு கொள்முதல் நிலையங்களில் இருந்த நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதம்… விவசாயிகள் வேதனை!

ஈரோடு கோபி பகுதியில் செயல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் வைத்திருந்த நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல்; திமுக கூட்டணிக்கு வன்னியர் கூட்டமைப்பு ஆதரவு!

9 மாவட்டங்களில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பதாக வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என் ராமமூர்த்தி அறிவித்துள்ளார்.

“விஜய் பெயரை பயன்படுத்த தடை கோரிய வழக்கு” – மகனை எதிர்க்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்!

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு நிர்வாகிகளை நேரில் சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர் அகில இந்திய தளபதி...

திடீரென அதிகரிக்கும் கொரோனா மரணம்; மூன்றாவது அலையின் தொடக்கமா?!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 309 பேர் கொரோனாவுக்கு பலியானதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த...
TopTamilNews