‘வேளாண் சட்டம்’ இடைக்கால உத்தரவு பிறப்பிப்போம் : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!

 

‘வேளாண் சட்டம்’ இடைக்கால உத்தரவு பிறப்பிப்போம் : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!

வேளாண் சட்டங்கள் தொடர்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிப்போம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்திருக்கிறார்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதனை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகள் நாளுக்கு நாள் வலுக்கிறது. இதுவரை நடத்தப்பட்ட எந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டாததால், போராட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. சர்ச்சையை கிளப்பும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரிக்கப்பட்டது. அப்போது, வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்து விட்டது. அதனால், வேளாண் சட்டங்கள் தொடர்பாக முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

‘வேளாண் சட்டம்’ இடைக்கால உத்தரவு பிறப்பிப்போம் : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!

இந்த நிலையில், இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வேளாண் சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியுமா? என்று மத்திய அரசிடம் கேட்டு சொல்லுமாறு தலைமை வழக்கறிஞர் வேணுகோபாலிடம் மீண்டும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தொடர்ந்து, ‘புதிய வேளாண் சட்டத்தின் கீழ் விவசாய நிலங்களை விற்க கூடாது என உத்தரவு பிறப்பிக்க உள்ளோம். உச்ச நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடிவு செய்திருக்கிறோம். பிரச்னையை தீர்க்கவே இந்த முடிவை எடுத்திருக்கிறோம். உச்சநீதிமன்றம் நியமிக்கும் குழுவை யாரும் தடுக்க முடியாது’ என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

‘வேளாண் சட்டம்’ இடைக்கால உத்தரவு பிறப்பிப்போம் : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!

மேலும் வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை விதிக்க முடியும் என்று தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்றம் பிறப்பிக்கவுள்ள இடைக்கால உத்தரவில் விவசாய நிலங்கள் பாதுகாக்க உறுதி செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். விவசாயிகள் பிரச்னையை தீர்க்க குழு அமைக்க உள்ள உச்சநீதிமன்றத்தின் முடிவுக்கு, மத்திய அரசு தரப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.