“உங்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் போதாது” – மத்திய விஸ்டாவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களை எச்சரித்த உச்ச நீதிமன்றம்!

“உங்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் போதாது” – மத்திய விஸ்டாவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களை எச்சரித்த உச்ச நீதிமன்றம்!

பிரதமர் மோடியால் டெல்லியில் மத்திய விஸ்டா திட்டம் தொடங்கப்பட்டது. புதிய நாடாளுமன்றம், ராஜபாதை, மத்திய அரசு அலுவலகங்கள், பிரதமர் அலுவலகம், இல்லம், சிறப்பு பாதுகாப்புப் படை அலுவலகம், குடியரசுத் துணைத் தலைவர் இல்லம் உள்ளிட்ட பல கட்டடங்கள் சுமார் 86 ஏக்கர் பரப்பளவில் 20 ஆயிரம் கோடி செலவில் கட்டப்படுகின்றன. இதற்கான பணிகள் கொரோனா 2ஆம் அலை உச்சத்தில் இருந்தபோது ஆரம்பிக்கப்பட்டன.

“உங்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் போதாது” – மத்திய விஸ்டாவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களை எச்சரித்த உச்ச நீதிமன்றம்!

இதன் காரணமாக டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் டெல்லியில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்தி உத்தரவிட்டது. மத்திய விஸ்டா திட்டமும் நிறுத்தப்பட்டது. கொரோனா பெருந்தொற்று இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திவரும் சூழலில், 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்ற கட்டடமும், பிரதமருக்குப் புதிய மாளிகையும் கட்டுவது அவசியமா என மக்களும் எதிர்க்கட்சிகளும் கேள்வியெழுப்பினர். இதனை முன்வைத்து மத்திய விஸ்டா திட்டத்தை நிறுத்த உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்து மே 31ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

“உங்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் போதாது” – மத்திய விஸ்டாவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களை எச்சரித்த உச்ச நீதிமன்றம்!

நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “மத்திய விஸ்டா திட்டம் சட்டப்பூர்வமானது என உச்ச நீதிமன்றமே உறுதி செய்திருக்கிறது. கட்டுமானப் பணிகள் உரிய நேரத்தில் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்பதால் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளின்படி தொழிலாளர்கள் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். ஏனென்றால் மத்திய விஸ்டா திட்டம் தேசிய முக்கியவத்துவம் வாய்ந்த அத்தியாவசிய திட்டம்.

“உங்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் போதாது” – மத்திய விஸ்டாவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களை எச்சரித்த உச்ச நீதிமன்றம்!

நாடாளுமன்றத்தின் இறையாண்மை செயல்பாடுகளும் அங்கு நடத்தப்படும் என்பதால் இந்தத் திட்டத்தில் பொதுமக்களும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர். இந்த மனுவை மனுதாரர் உள்நோக்கம் கொண்டு தாக்கல் செய்துள்ளார். இதில் பொதுநலன் என்ற ஒன்று இல்லவே இல்லை. ஆகையால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

“உங்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் போதாது” – மத்திய விஸ்டாவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களை எச்சரித்த உச்ச நீதிமன்றம்!

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் விசாரித்தது. அப்போது நீதிபதிகள், “மத்திய விஸ்டா திட்டத்தை பற்றி மட்டுமே ஏன் கவனம் செலுத்துகிறீர்கள். டெல்லியின் வேறு எந்த பொது திட்டமும் செயல்படவே இல்லையா? டெல்லி உயர் நீதிமன்றம் விதித்த 1 லட்சம் ரூபாய் தான் உங்கள் பிரச்சினை என்றால் அந்த அபராதம் எங்களைப் பொறுத்தவரை குறைவானது என்றே கூறுவோம்” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.