நினைத்த இடத்திலெல்லாம் போராட கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு… ஏன்? எதற்காக?

 

நினைத்த இடத்திலெல்லாம் போராட கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு… ஏன்? எதற்காக?

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லியிலுள்ள ஷாகின்பாக்கில் போராட்டம் நடைபெற்றது. போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே, அப்பகுதியில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்குப் போராட்டம் இடையூறாக இருப்பதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொது இடத்தை ஆக்கிரமித்து காலவரையறை இல்லாமல் போராடுவது ஏற்புடையதல்ல என்று தீர்ப்பு கூறியது.

நினைத்த இடத்திலெல்லாம் போராட கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு… ஏன்? எதற்காக?

இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்ய ஏராளமான சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் நேற்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், “ஒரு சட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்த மக்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அது பொது மக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்ற முந்தைய தீர்ப்பின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. போராடும் உரிமை என்பது சில கடமைகளுக்கு உட்பட்டதாகும். போராட்டத்தின் பேரில் பொது இடத்தைப் பல்வேறு நாட்கள் ஆக்கிரமித்து பிறருக்கு இடையூறு செய்வது அவர்களின் உரிமையைப் பாதிக்கும் செயலாகும்.

நினைத்த இடத்திலெல்லாம் போராட கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு… ஏன்? எதற்காக?

நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் போராடும் உரிமை எப்போதும் எந்த நேரத்திலும் இருக்க முடியாது. பொது மக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில், போராடுவதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் போராட்டங்களை நடத்த வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது. தற்போது டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், இப்படியான ஒரு தீர்ப்பு வெளியாகிருப்பது போராட்டக்காரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, டெல்லி எல்லைகளில் போராடிய விவசாயிகளை உள்ளூர் மக்கள் அடித்துவிரட்டியதும் இதில் கவனித்தக்க ஒன்று. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை.