“எங்களையே கேள்வி கேட்குறீங்களா” – வழக்கு தொடுத்தவரின் நிலத்தை பறிமுதல் செய்ய உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்!

“எங்களையே கேள்வி கேட்குறீங்களா” – வழக்கு தொடுத்தவரின் நிலத்தை பறிமுதல் செய்ய உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் போப்டேவின் பதவிக்காலம் ஏப்ரல் 23ஆம் தேதியோடு நிறைவடைந்தது. அவ்வாறு போப்டே தனக்கு அடுத்த இடத்தில் இருந்த என்.வி. ரமணாவை பரிந்துரை செய்தார். இதற்கு ஒப்புதல் அளித்தார் குடியரசுத் தலைவர். அதன்படி வரும் ஏப்ரல் 24ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ரமணா பொறுப்பேற்றுக் கொண்டார். அடுத்து யாரை நியமிக்கலாம் என ஓய்வுபெறவிருக்கும் தலைமை நீதிபதியிடம் மத்திய அரசு பரிந்துரை கேட்கும். குடியரசுத் தலைவர் இறுதி முடிவு எடுப்பார்.

“எங்களையே கேள்வி கேட்குறீங்களா” – வழக்கு தொடுத்தவரின் நிலத்தை பறிமுதல் செய்ய உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்!

எப்போதுமே ஓய்வுபெறவிருக்கும் தலைமை நீதிபதி தான் அடுத்த தலைமை நீதிபதி யார் என்பதைப் பரிந்துரை செய்வார். அவர் பரிந்துரைத்தவர் தகுதியானவரா என்பதைக் கண்டுணர்ந்து மத்திய அரசும் குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளிப்பார்கள். இதுதான் காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு மரபு. குறிப்பாக சீனியாரிட்டியின் படி தலைமை நீதிபதிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் மூத்த நீதிபதி பரிந்துரைக்கப்படுவார். அதன்படி 2017ஆம் ஆண்டு தீபக் மிஸ்ராவை ஜெகதீஷ் சிங் தலைமை நீதிபதியாகப் பரிந்துரைத்தார்.

“எங்களையே கேள்வி கேட்குறீங்களா” – வழக்கு தொடுத்தவரின் நிலத்தை பறிமுதல் செய்ய உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்!
போப்டே

காலங்காலமாக இந்த நடைமுறைதான் கடைப்பிடிக்கப்படுகிறது. 2017ஆம் ஆண்டு தீபக் மிஸ்ரா நியமனத்தை எதிர்த்து சுவாமி ஓம், முகேஷ் ஜெயின் என இருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்தபோதே சுவாம் ஓம் உயிரிழந்துவிட்டார். முகேஷ் ஜெயின் தற்போது சிறையில் இருக்கிறார். வழக்கின் இறுதி விசாரணை முடிந்து வழங்கப்பட்ட தீர்ப்பில், உள்நோக்கத்து டன் வேண்டுமென்றே மனு தாக்கல் செய்ததால் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

“எங்களையே கேள்வி கேட்குறீங்களா” – வழக்கு தொடுத்தவரின் நிலத்தை பறிமுதல் செய்ய உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்!
தீபக் மிஸ்ரா

மனுதாரரின் கோரிக்கையை ஏற்று கடந்தாண்டு அபராத தொகை ரூ.5 லட்மாகக் குறைக்கப்பட்டது. இன்னும் கொஞ்சம் அபராதத்தைக் குறைக்க வேண்டும் என்று கோரி முகேஷ் ஜெயின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நேற்று விசாரணைக்கு வந்தது. இதனை நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது அபராதத்தைக் குறைக்க மறுத்து நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். மனுதாரரிடமிருந்து அபராதத் தொகையை வசூலிக்க அவரது நிலத்தை பறிமுதல் செய்யவும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.