விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு தடைகோரிய வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு !

விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு தடைகோரிய வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு !

டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணிக்கு எதிரான மத்திய அரசின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு தடைகோரிய வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு !

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, 60வது நாளாக டெல்லியில் விவசாயிகள் இன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, மத்திய அரசு 10 ஆவது நாளாக இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. ஆனாலும் பேச்சுவார்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாக தெரியவில்லை. இதனால் கடும் குளிரிலும் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அத்துடன் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிடில், குடியரசு தினத்தன்று டிராக்டர்களுடன் பேரணி நடத்துவதுடன், முற்றுகை போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் டிராக்டர் பேரணிக்கு தடைவிதிக்க மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு தடைகோரிய வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு !

இந்நிலையில் குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் நுழைந்து விவசாயிகள் பேரணி நடத்த தடைகோரும் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. டிராக்டர் பேரணியை அனுமதிப்பதும் அல்லது நிறுத்துவதும் மத்திய அரசின் கீழுள்ள டெல்லி போலீசாரின் முடிவு. ஒரு போராட்டத்தை நடத்த அல்லது தடுத்து நிறுத்த வேண்டியது அதிகாரிகளே. போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறி மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.