வன்னியர் உள்ஒதுக்கீட்டுக்கு தடையில்லை…உச்சநீதிமன்றம் அதிரடி!

 

வன்னியர் உள்ஒதுக்கீட்டுக்கு தடையில்லை…உச்சநீதிமன்றம் அதிரடி!

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்பது பாமகவின் பல ஆண்டுகால கோரிக்கை. இதை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு நிறைவேற்றி வைத்தது. வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்த முதல்வர் பழனிசாமி, இந்த உள் ஒதுக்கீடு தற்காலிகமானது என்றும் சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள் கிடைத்த பிறகு உள் ஒதுக்கீடு மாற்றி அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வன்னியர் உள்ஒதுக்கீட்டுக்கு தடையில்லை…உச்சநீதிமன்றம் அதிரடி!

அரசின் இந்த அறிவிப்பு வன்னியர் சமூகத்தினரை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்த நிலையில், பிற சமூகத்தினர் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியது. வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி பலர் நீதிமன்றங்களை நாடினர். சென்னை உயர்நீதிமன்றம் உட்பட எல்லா நீதிமன்றங்களும் உள் ஒதுக்கீட்டை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து விட்டது.

இந்த நிலையில் வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி மதுரையை சேர்ந்த அபிஷ் குமார் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்ஒதுக்கீட்டை ரத்து செய்ய நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து விட்டனர். மேலும், இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்தனர்.