விமான முன்பதிவு கட்டணத்தை திருப்பித்தர உச்சநீதிமன்றம் உத்தரவு!

 

விமான முன்பதிவு கட்டணத்தை திருப்பித்தர உச்சநீதிமன்றம் உத்தரவு!

மார்ச் 25 ஆம் தேதியில் இருந்து மே 24 ஆம் தேதி வரையில், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிறுவனங்களில் முன்பதிவு செய்தவர்களுக்கான கட்டணத்தை திருப்பித்தர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விமான முன்பதிவு கட்டணத்தை திருப்பித்தர உச்சநீதிமன்றம் உத்தரவு!

கொரோனா ஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் விமான போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் விமானபயணத்துக்கு முன்பதிவு செய்தவர்கள் பயணம் மேற்கொள்ளாத நிலையில், பயணக் கட்டணங்களை திருப்பி கேட்கத் தொடங்கினர். விமான நிறுவனங்கள் தரப்பில், முன்பதிவை ரத்து செய்யாமல், வேறொரு நாளில் விமான பயணத்தை மேற்கொள்ள வலியுறுத்து வந்தது. இதையடுத்து, பயணிகள் மற்றும் பயண முகவர்களின் தொகை சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் விமான நிறுவனங்களில் முடங்கி இருந்தது.

இதையடுத்து, தமிழ்நாடு சுற்றுலா நிறுவனங்கள் சார்பில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு கடிதம் எழுதப்பட்டதுடன், உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் , மார்ச் 25ம் தேதியில் இருந்து 2020 மே24 வரையிலும் உள்ள காலத்தில் விமான முன்பதிவு செய்திருந்தால் அதனை திரும்ப அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

விமான முன்பதிவு கட்டணத்தை திருப்பித்தர உச்சநீதிமன்றம் உத்தரவு!


விமான முன்பதிவு பயண சீட்டை, வேறொருவருக்கு மாற்றவும் அனுமதிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறையை உள்ளூர் மற்றும் சர்வதேச பயணசீட்டுகளுக்கும் பொருந்தும்
எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

விமான முன்பதிவு கட்டணத்தை திருப்பித்தர உச்சநீதிமன்றம் உத்தரவு!

இது தொடர்பாக , சுற்றுலா பயண நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவர் வீ.கே.டி பாலன் வெளியிட்டுள்ள செய்தியில், உச்சநீதிமன்ற தீர்ப்பினை வரவேற்பதாகவும், இந்த தீர்ப்பு வர காரணமாக இருந்த மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்து நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.