சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்துக்கு தடை கோரிய வழக்கு – தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்துக்கு தடை கோரிய வழக்கு – தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பொதுத்தேர்வுகளை நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. இதை கருத்தில் கொண்டு, சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், உத்தரகண்ட், ஒடிசா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யப்பட்டன. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவை எந்த முறையில் நிர்ணயிக்கலாம் என்பது குறித்து ஆய்வுசெய்ய 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்துக்கு தடை கோரிய வழக்கு – தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்துக்கு தடை கோரிய வழக்கு – தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!

12ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு முடிவுகள் ஜூலை 31ஆம் தேதி வெளியிடவிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிபிஎஸ்இ தாக்கல் செய்த மதிப்பெண் கணக்கீட்டு முறைக்கு அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றம், மதிப்பெண் கணக்கீடு செய்யப்படும் முறையைத் தனது இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. மாணவர்களுக்குத் தனி குறை தீர்க்கும் மையம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சிபிஎஸ்இ வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

இச்சூழலில் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்துக்கு தடைவிதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமானோர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் இன்று நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் தினேஷ் மகேஸ்வரி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், “சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ வாரியங்களின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறோம்.

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்துக்கு தடை கோரிய வழக்கு – தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!

இது அனைத்து மாணவர்களின் நலனையும் கருத்தில்கொண்டு எடுக்கப்பட்ட முடிவு. வாரியங்கள் பல்வேறு கட்ட ஆலோசனைக்களுக்குப் பிறகும், பொதுமக்களிடம் கருத்து கேட்ட பிறகுமே இம்முடிவை எடுத்துள்ளன. நாங்கள் இங்கே அமர்ந்துகொண்டு தீர்ப்பு வழங்க முடியாது” எனக் கூறி தள்ளுபடி செய்தனர். தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து முடிவுக்கு தடைகோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதிக்க முடியாது என திட்டவட்டமாகக் கூறியது கவனிக்கத்தக்கது.