கோவிட்-19 சரியான காரணம் கிடையாது… பீகார் தேர்தலை ஒத்திவைக்க கோரிய மனு தள்ளுபடி.. உச்ச நீதிமன்றம்

 

கோவிட்-19 சரியான காரணம் கிடையாது… பீகார் தேர்தலை ஒத்திவைக்க கோரிய மனு தள்ளுபடி.. உச்ச நீதிமன்றம்

தேர்தல்களை ஒத்திவைக்க கோவிட்-19 சரியான காரணமாக இருக்க முடியாது என பீகார் தேர்தலை ஒத்திவைக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போதைய பீகார் அரசின் பதவி காலம் வரும் அக்டோபர் மாதத்துடன் நிறைவடைய உள்ளது. புதிய சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் தேர்தல் ஆணையம் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் கோவிட்-19 தொற்று நோய் மற்றும் வெள்ளத்தால் பீகார் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் அம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்துவது சரியாக இருக்காது என ஒரு சில கட்சிகள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

கோவிட்-19 சரியான காரணம் கிடையாது… பீகார் தேர்தலை ஒத்திவைக்க கோரிய மனு தள்ளுபடி.. உச்ச நீதிமன்றம்
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

இந்நிலையில் அவினாஷ் தாக்கூர் என்பவர், கொரோனா வைரஸ் தொற்று நோய் மற்றும் வெள்ள பாதிப்பிலிருந்து விடுபடும் வரை பீகார் சட்டப்பேரவை தேர்தலை ஒத்திவைக்க தலைமை தேர்தல் ஆணையருக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அசோக் பூஷன் தலைமையில் நீதிபதிகள் ஆர்.எஸ். ரெட்டி மற்றும் எம்.ஆர். ஷா அடங்கிய அமர்வு அந்த மனுவை விசாரித்தது.

கோவிட்-19 சரியான காரணம் கிடையாது… பீகார் தேர்தலை ஒத்திவைக்க கோரிய மனு தள்ளுபடி.. உச்ச நீதிமன்றம்
இந்திய தேர்தல் ஆணையம்

விசாரணையின் போது, மனுதாரர் சார்பான வழக்கறிஞர், அசாரண சூழ்நிலைகளில் தேர்தல்களை ஒத்திவைக்க மக்கள் பிரதிநிதித்துவம் சட்டம் சொல்கிறது என்ற அடிப்படையில் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக தேர்தல்களை ஒத்திவைக்க நீதிமன்றம் தலைமை தேர்தல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார். இதனையடுத்து உச்ச நீதிமன்றம், தேர்தல்களை ஒத்திவைக்க கோவிட்-19 சரியான காரணமாக இருக்க முடியாது என குறிப்பிட்டு பீகார் தேர்தலை ஒத்திவைக்ககோரிய மனுவை தள்ளுபடி செய்தது. இந்த விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையம்தான் முடிவு எடுக்கும், தேர்தல்களை நடத்த வேண்டாம் என்று நீதிமன்றம் தேர்தல் குழுவை வழிநடத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.