பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாள் தொடுத்த வழக்கு… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாள் தொடுத்த வழக்கு… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,“சென்னை உயர் நீதிமன்றத்தில் (எம்டிஎம்ஏ) பல்நோக்கு விசாரணைக் குழுவின் விசாரணை முடியும் வரை பேரறிவாளன் விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது என ஆளுநர் கூறியுள்ளார். அதேவேளையில் உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் தன் தண்டனையை நிறுத்தி வைக்க்கோரிய வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாள் தொடுத்த வழக்கு… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

விசாரணையின்போது பேரறிவாளனை விடுதலை செய்ய தனக்கு அதிகாரம் இல்லை என்றும் குடியரசுத் தலைவருக்கு தான் அதிகாரம் உள்ளது என்றும் தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார். அரசியல் சாசன நீதிமன்றங்களில் இவ்வாறு இருவேறு மாறுபட்ட கருத்தை தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார். அதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்நோக்கு விசாரணைக் குழு விசாரணை முடியும் வரை பேரறிவாளன் விடுதலை செய்வது தொடர்பாக முடிவெடுக்க முடியாது என்ற ஆளுநர் கொடுத்த கடிதத்தின் நகலை எங்களுக்க்குத் தர வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாள் தொடுத்த வழக்கு… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர். அதேவேளையில், பேரறிவாளன் தனது தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய பிரதான மனுவுடன் இணைத்து ஆளுநர் கடித நகல் கோரிய அற்புதம் அம்மாளின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.