பல்கலை. விருப்பப்பட்டால் செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம் : உச்சநீதிமன்றம்

 

பல்கலை. விருப்பப்பட்டால் செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம் : உச்சநீதிமன்றம்

பல்கலைக்கழகங்கள் விருப்பப்பட்டால் செமெஸ்டர் தேர்வுகளை நடத்தலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால், மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. குறிப்பாக முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு செமெஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதே போல இறுதியாண்டை தவிர அரியர் தேர்வுகளின் கட்டணம் செலுத்தி காத்துக் கொண்டிருந்த மாணவர்களுக்காக அரியர் தேர்வுகளை ரத்து செய்தும் அரசு உத்தரவிட்டது. இதனிடையே இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என யுஜிசி அறிவித்தது.

பல்கலை. விருப்பப்பட்டால் செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம் : உச்சநீதிமன்றம்

இதனை எதிர்த்து மாணவர்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தது. அந்த வழக்கு விசாரணையின் போது, இறுதியாண்டு செமெஸ்டர் தேர்வுகளை கட்டாயம் நடத்துவோம் என்றும் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற போக்கில் மாணவர்கள் இருக்காமல் தேர்வுக்கு தயாராகுங்கள் என்றும் யுஜிசி தெரிவித்து விட்டது.

இந்த நிலையில் இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகளை நடத்த வேண்டும் என மாணவர்கள் அமைப்பு சார்பில் வாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பல்கலைக் கழகங்கள் விருப்பப்பாட்டால் முதலாம் மற்றும் இறுதியாண்டு தேர்வுகளை நடத்தலாம் என தெரிவித்த நீதிபதிகள், மாணவர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.