புதிய நாடாளுமன்றம் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி!

 

புதிய நாடாளுமன்றம் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி!

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டட பணிகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

புதிய நாடாளுமன்றம் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி!

டெல்லியில் கட்டப்படவுள்ள புதிய நாடாளுமன்றம் மற்றும் அதனையொட்டிய பிற கட்டுமானங்களை கட்டுவதற்கான சென்ட்ரல் விஸ்டா புராஜெக்ட்-இல் பல விதிமீறல்கள் உள்ளன. எனவே இந்த திட்டத்தை உடனடியாக நிறுத்த கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

புதிய நாடாளுமன்றம் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி!

இந்த மனுக்களின் மீதான விசாரணையின் போது, இந்த வழக்கில் விசாரணை முடியும் வரை புதிதாக கட்டுமானங்களை எழுப்பவோ, பழைய கட்டுமானங்களை இடிக்கவோ கூடாது என்று நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இதை தொடர்ந்து கடந்த 10 ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

புதிய நாடாளுமன்றம் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி!

இந்நிலையில் டெல்லியில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அடிக்கல் நாட்ட அனுமதித்த நிலையில் நாடாளுமன்ற கட்டிடப் பணிகளுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நாடாளுமன்றம் கட்டும்போது மாசை குறைக்கும் கோபுரங்கள் அமைக்க வேண்டும் என்றும் புராதன சின்னங்களை நிர்வகிக்கும் அமைப்பிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கன்னா அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.

புதிய நாடாளுமன்றம் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி!

முக்கோண வடிவில் ரூ.971 கோடியில் புதிய நாடாளுமன்றம் கட்டப்படுகிறது. மோடியின் சுயசார்பு திட்டத்தின் கீழ் 64 ஆயிரத்து 500 சதுர மீட்டரில் அமைய உள்ள புதிய கட்டடத்தில் கலைநயம், எரிசக்தி, சேமிப்பு ,பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் அமைய உள்ளது. மக்களவையில் 888, மாநிலங்களவையில் 543 இருக்கைகள் , எம்பிக்களுக்கு ஓய்வறை , அனைத்து துறை நிலைக்குழு அலுவலகங்கள் உள்ளிட்டவை அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.