`சசிகலா எப்போது சிஎம் ஆவார்?’- வட மாநில ஜோதிடர்களை நாடும் ஆதரவாளர்கள்

 

`சசிகலா எப்போது சிஎம் ஆவார்?’- வட மாநில ஜோதிடர்களை நாடும் ஆதரவாளர்கள்

சிறையில் இருந்து விரைவில் வெளியே வர உள்ள சசிகலா எப்போது முதல்வராவார் என்று அவரது ஆதரவாளர்கள், வட மாநில ஜோதிடர்களை சந்தித்து ஆலோசனை செய்து வருவதோடு, பரிகாரம் செய்து வருகின்றனர்.

`சசிகலா எப்போது சிஎம் ஆவார்?’- வட மாநில ஜோதிடர்களை நாடும் ஆதரவாளர்கள்

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, தற்போது பெங்களூரு சிறையில் இருக்கிறார். சிறைத் தண்டனை அனுப்பவிக்கும் காலம் ஆகஸ்ட் மாதத்தில் முடிவடைகிறது. இதனால் அவர் அடுத்த மாதம் வெளியே வருவார் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் 100 ரூபாய் அபாரதம் இன்னும் கட்டப்படவில்லை. அப்படி அபராதம் கட்டாத பட்சத்தில் மேலும் சில மாதங்கள் சிறைத் தண்டனை அவர் அனுபவிக்க வேண்டியது வரும்.

இந்த நிலையில், சசிகலா வெளியே வந்த உடன் தமிழக அரசியலில் மாற்றம் வரும் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். அவர் வெளியே வருவதற்கு முன்னதாகவே சசிகலாவின் அரசியல் எதிர்காலம் குறித்து அவரது ஆதரவாளர்கள் ஜோதிடர்களை நாடி வருகின்றனர். சசிகலாவின் ஜாதகத்தை காட்டி அவர்கள் ஆலோசனை கேட்கின்றனர். மேலும் அவர்கள், தமிழக ஜோதிடர்கள் மட்டும் அல்லாமல் வட இந்திய ஜோதிடர்களையும் தேடிச் செல்கின்றனர். அண்மையில், கங்கை கரையில் உள்ள காசிக்கும், அலகாபாதிற்கும் சென்ற சசிகலா ஆதரவாளர் ஒருவர், காசியில் பிரபல ஜோதிடர் ஒருவரைப் பார்த்து, சசிகலாவின் ஜாதகத்தைக் காட்டி, எதிர்காலம் குறித்து கேட்டிருக்கிறார்.

`சசிகலா எப்போது சிஎம் ஆவார்?’- வட மாநில ஜோதிடர்களை நாடும் ஆதரவாளர்கள்

அந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி, காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு பூஜையும் நடத்தியுள்ளார் அவர். அலகாபாதிலும், திரிவேணி சங்கமத்திலும் பூஜைகள் நடத்தி அவர், ‘சசிகலா எப்போது முதல்வர் ஆவார். அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்’ என்று ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார் ஆதரவாளர் ஒருவர்.

சசிகலா, சிறையில் இருந்து வெளியே வந்தாலும் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. 4 ஆண்டு தண்டனை பெற்ற ஒருவர், தனது தண்டனை காலத்தை சிறையில் இருந்து அனுபவித்து வெளியே வந்தாலும் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்கிறது சட்டம். இந்த சட்டமே தெரியாமல் சசிகலாவின் ஆதரவாளர்கள் சசிகலா எப்போது முதல்வர் ஆவார் என்று பரிகாரம் செய்வது விந்தையிலும் விந்தை. அவர் வேண்டுமானால் அதிமுகவை கைப்பற்றி நினைக்கலாம். ஆனால், 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.