முதல்வரை மாற்றுங்க.. பஞ்சாபை தொடர்ந்து ராஜஸ்தானில் ஆரம்பித்தது காங்கிரஸ் உட்கட்சி மோதல்

 

முதல்வரை மாற்றுங்க.. பஞ்சாபை தொடர்ந்து ராஜஸ்தானில் ஆரம்பித்தது காங்கிரஸ் உட்கட்சி மோதல்

பஞ்சாபில் முதல்வர் மாற்றம் முடிவுக்கு வந்தநிலையில், தற்போது ராஜஸ்தானில் முதல்வரை மாற்ற வேண்டும் என்று அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் சிலர் போர் கொடி தூக்கியுள்ளனர்.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு ஆதரவாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மாத காலமாக ராஜஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே காங்கிரஸ் மேலிடம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக கூறியதையடுத்து சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சமாதானம் ஆகி மீண்டும் காங்கிரசில் இணைந்தனர்.

முதல்வரை மாற்றுங்க.. பஞ்சாபை தொடர்ந்து ராஜஸ்தானில் ஆரம்பித்தது காங்கிரஸ் உட்கட்சி மோதல்
சச்சின் பைலட், அசோக் கெலாட்

காங்கிரஸ் மேலிடம் வாக்குறுதியை நிறைவேற்றாததால் சச்சின் பைலட் முகாம் அதிருப்தியில் உள்ளனர். இந்த சூழ்நிலையில் தற்போது முதல்வரை மாற்ற வேண்டும் என்ற சச்சின் பைலட் ஆதரவாளர்களின் குரல் காங்கிரசில் ஒலிக்க தொடங்கியுள்ளது. ராஜஸ்தான் காங்கிரஸின் துணை தலைவர் ராஜேந்திர சவுத்ரி செய்தி நிறுவன் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சச்சின் பைலட்டின் கடின உழைப்பால் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் நடந்தபோது, காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தை சச்சின் பைலட் வழிநடத்துவார் என்ற எண்ணத்தில் மக்கள் இருந்தனர்.

முதல்வரை மாற்றுங்க.. பஞ்சாபை தொடர்ந்து ராஜஸ்தானில் ஆரம்பித்தது காங்கிரஸ் உட்கட்சி மோதல்
ராஜேந்திர சவுத்ரி

ஆனால் இந்த பொறுப்பை அசோக் கெலாட்டுக்கு கொடுக்க கட்சி முடிவு செய்தது. சச்சின் பைலட் துணை முதல்வரானார். இன்று ஏராளமான மக்கள் அவரிடம் (சச்சின் பைலட்) வருகிறார்கள். ஆனால் அவர் மக்களுக்கு உதவி செய்யும் நிலையில் இல்லை. நாம் கடின உழைப்பை செய்யும்போதெல்லாம், நாம் எதையாவது எதிர்பார்க்கிறோம். யாரோ ஒருவர் கடின உழைப்பை செய்ய, அதன் பலனை இன்னொருவர் பெறுவது போலவும் இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.