Home அரசியல் "வேண்டும்… வேண்டும்… அமைச்சர் பதவி வேண்டும்" - சூறையாடப்பட்ட பாஜக அலுவலகம்… புதுச்சேரியில் பதற்றம்!

“வேண்டும்… வேண்டும்… அமைச்சர் பதவி வேண்டும்” – சூறையாடப்பட்ட பாஜக அலுவலகம்… புதுச்சேரியில் பதற்றம்!

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த மாதம் 5ஆம் தேதி வெளியானது. அதில் என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி 16 இடங்களில் வென்றது. ஆறில் சுயேச்சையும் எட்டில் திமுக, காங்கிரஸ் கூட்டணியும் வென்றன. பெரும்பான்மை பாஜக கூட்டணிக்கே இருந்ததால் முதலமைச்சராக என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதவியேற்றார். ஆனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அமைச்சரவை ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

"வேண்டும்… வேண்டும்… அமைச்சர் பதவி வேண்டும்" - சூறையாடப்பட்ட பாஜக அலுவலகம்… புதுச்சேரியில் பதற்றம்!
"வேண்டும்… வேண்டும்… அமைச்சர் பதவி வேண்டும்" - சூறையாடப்பட்ட பாஜக அலுவலகம்… புதுச்சேரியில் பதற்றம்!

அவர் குணமடைந்து வந்த பின்னும் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது. இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் சபாநாயகர் பதவியும் 2 அமைச்சர்கள் பதவியும் பாஜகவிற்கு வழங்க சம்மதம் தெரிவித்தார் ரங்கசாமி. முடிவு எட்டப்பட்டதால் சபாநாயகராக பாஜக எம்எல்ஏ ஏம்பலம் செல்வம் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் புதுச்சேரியில் இன்னமும் பிரச்சினை முடிந்தபாடில்லை.

காங்கிரஸிலிருந்து விலகுகிறாரா புதுச்சேரி எம்எல்ஏ ஜான்குமார்? - பாஜக  பொறுப்பாளருடன் ரகசிய சந்திப்பு | Johnkumar MLA will move to BJP -  hindutamil.in

போராடி கூட்டணிக்குள் அமைச்சர் பதவியைப் பெற்ற பாஜகவிற்கு அடுத்த தலைவலி உண்டாகியிருக்கிறது. இரு அமைச்சர் பதவிகளில் ஒன்று நமச்சிவாயத்திற்கு என்று உறுதியாகிவிட்டது. மற்றொரு பதவிக்கு தான் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்திலிருந்தே ஜான்குமார் தனக்கு அமைச்சர் பதவி கொடுத்தே ஆக வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கிறார். அதற்காக தனது ஆதரவாளர்களைப் போராட்டத்தில் களமிறக்கியுள்ளார். வேறு ஒருவருக்கு அமைச்சர் பதவி செல்லக் கூடும் என தகவல் கசிந்தது.

இதனையறிந்த உடனே காமராஜ் நகர் தொகுதி, நெல்லித்தோப்பு தொகுதியைச் சேர்ந்த ஜான்குமாரின் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய, மாநில பாஜக, ஜான்குமார் எம்எல்ஏவுக்கு, அமைச்சர் பதவி வழங்க வேண்டுமென வலியுறுத்தி கோஷமிட்டனர். திடீரென அலுவலகம் முன்பிருந்த பெயர்ப் பலகையைக் கிழித்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

"வேண்டும்… வேண்டும்… அமைச்சர் பதவி வேண்டும்" - சூறையாடப்பட்ட பாஜக அலுவலகம்… புதுச்சேரியில் பதற்றம்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

கொங்கு பேரவை யுவராஜ்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

கொங்கு பேரவை அமைப்பின் தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. ஈமு கோழி மோசடி வழக்கில் இந்த...

“நாங்களும் மெடல் வாங்குவோம்” – விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ‘தனி ஒருவன்’ ரவிக்குமார்!

டோக்கியோவிலிருந்து கடந்த இரு நாட்களாக இந்தியாவிற்கு தொடர்ச்சியாக நல்ல செய்திகளாக வந்துகொண்டிருக்கின்றன. நேற்று குத்துச்சண்டை போட்டியில் அரையிறுதிச் சுற்றில் போராடி தோற்றாலும் இந்தியாவுக்கு மூன்றாம் பதக்கத்தை லவ்லினா பெற்றுத்தந்தார். அதேபோல...

காதலனுடன் சேர்ந்து தலையணையால் அழுத்தி கணவனை கொன்ற மனைவி

சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள மார்க்கெட்டில் வாழை இலை கடையை நடத்தி வந்தவர் பிரபு. இவர் சொந்த அக்கா மகள் ஷாலினியை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு...

“தமிழகத்திற்கு பேரிழப்பு; சொல்லொண்ணா சோகம் அடைந்தேன் மது அண்ணா” – எடப்பாடி உருக்கம்!

வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் கோளாறால் பல மாதங்களாக அவதிப்பட்டு வந்த அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் இன்று காலமானார். அவருக்கு வயது 80. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால்...
- Advertisment -
TopTamilNews