’சுப்னம் கில் சூப்பர் ப்ளேயர்’ – 5 வருஷத்துக்கு முன்பே கணித்த முன்னாள் வீரர்

 

’சுப்னம் கில் சூப்பர் ப்ளேயர்’ – 5 வருஷத்துக்கு முன்பே கணித்த முன்னாள் வீரர்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியாவும், டி20 தொடரை இந்தியாவும் கைப்பற்றியது. அவற்றைத் தொடர்ந்து டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் மோசமாக ஆடி தோற்றது இந்திய கிரிக்கெட் அணி. கேப்டன் விராட் கோலி இந்தியா திரும்பிவிட்டார். ரஹானே தலைமையிலான இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதன்மூலம் இரண்டாம் டெஸ்ட்டை வென்று தொடரில் இரு அணிகளும் 1:1 எனும் சமமான புள்ளிகளோடு இருக்கின்றன.

’சுப்னம் கில் சூப்பர் ப்ளேயர்’ - 5 வருஷத்துக்கு முன்பே கணித்த முன்னாள் வீரர்

முதல் போட்டியில் ப்ரீத்தீவ் ஷா ஓப்பனிங் இறங்கினார். ஆனால், இரண்டு இன்னிங்க்ஸிலும் மோசமான ஆட்டத்தை ஆடினார். பலரும் சென்ற போட்டி தோற்க ப்ரித்திவ் ஷாவின் ஆட்டத்தையே சொன்னார்கள். அதனால், அவரை மாற்றி விட்டு சுப்னம் கில்லை இரண்டாம் போட்டியில் களம் இறக்கினார்கள்.

ஏற்கெனவே இந்திய அணியின் முன்னாள் கேப்டன் காவஸ்கர், அணியின் ஸ்கோர் உயர, ஓப்பனிங் நன்கு அமைய வேண்டும். அதனால், ஓப்பனிங் வீரராக சுப்மன் கில் இறங்க வேண்டும் என நான் விரும்புகிறேன்’ என்று தெரிவித்திருந்தார்.

’சுப்னம் கில் சூப்பர் ப்ளேயர்’ – 5 வருஷத்துக்கு முன்பே கணித்த முன்னாள் வீரர்

இவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றினார் கில். முதல் இன்னிங்க்ஸில் 45 ரன்களும், இரண்டாவது இன்னிங்க்ஸில் ஆட்டமிழக்காமல் 36 பந்துகளில் 35 ரன்களும் எடுத்தார் கில். இதில் 7 பவுண்ட்ரிகளும் அடங்கும்.

இந்த முறை இந்திய அணி வெற்றி பெற்றதால், சுப்னம் கில்லுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பிரபலமான பத்திரிகையாளரான சம்பிட் பால் ஒரு ட்விட் செய்திருக்கிறார். அதில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே சுப்னம் கில்லைப் பாராட்டி, அவரை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்; என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் சொன்னாராம்.

’சுப்னம் கில் சூப்பர் ப்ளேயர்’ – 5 வருஷத்துக்கு முன்பே கணித்த முன்னாள் வீரர்

இந்திய தேசிய கிரிக்கெட் அகாடெமியின் தலைவராக உள்ளவர் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட். இவர் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியையே மறுத்து இளம் வீரர்களை தயார் செய்வதையே தனது குறிக்கோளாக வைத்திருக்கிறார். அதனால்தான் கில்லின் திறமையை தொடக்கத்திலேயே கண்டறிந்திருக்கிறார்.