• April
    05
    Sunday

Main Area

Main



திருப்பதி ஏழுமலையானுக்கு பத்திரிகை வைத்த சூப்பர் ஸ்டார் மகள்

soundarya rajinikanth
soundarya rajinikanth

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா தனது திருமண பத்திரிகையை திருப்பதி ஏழுமலையானிடம் வைத்து ஆசீர்வாதம் பெற்றார்.

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சவுந்தர்யா சென்னையை சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் என்பவரை கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்தார். திருமணமான சில மாதங்களில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். மேலும் சவுந்தர்யாவும், அவரது கணவரும் சமீபத்தில் நீதிமன்றத்தின் மூலம் விவாகரத்தும் பெற்றனர். தொடர்ந்து, சவுந்தர்யா தனது மகனுடன் தந்தையின் போயஸ் கார்டன் வீட்டில் வசித்து வந்தார். 

soundarya rajinikanth

இந்நிலையில் சவுந்தர்யா கோவையைச் சேர்ந்த தொழிலதிபரின் மகனை மறுமணம் செய்ய உள்ளார். சத்தமில்லாமல் கடந்த மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது.

இதனையடுத்து நேற்று முன்தினம் சவுந்தர்யா தன் தாய் லதா ரஜினிகாந்த்துடன் திருப்பதிக்கு சென்றார். இவர்களுடன், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் என 20 பேர் சென்றனர். நேற்று காலை சிறப்பு தரிசனத்தின் மூலம் சுவாமி வெங்கடாஜலபதியை அவர்கள் தரிசனம் செய்தனர். அப்போது சவுந்தர்யாவின் மறுமண அழைப்பிதழை சுவாமி பாதங்களில் வைத்து வணங்கி பூஜை செய்து பெற்றுக்கொண்டனர். அதன் பிறகு லதா ரஜினிகாந்த் ரங்கநாதர் மஹாலில் உள்ள தேவஸ்தான அதிகாரிகளுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கினார்.

2018 TopTamilNews. All rights reserved.