சூப்பர் ஸ்டாரின் 70வது பிறந்தநாள் : ரஜினி மக்கள் மன்றத்தினர் செய்த நல்ல காரியம்!

சூப்பர் ஸ்டாரின் 70வது பிறந்தநாள் : ரஜினி மக்கள் மன்றத்தினர் செய்த நல்ல காரியம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 70வது பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறது.

சூப்பர் ஸ்டாரின் 70வது பிறந்தநாள் : ரஜினி மக்கள் மன்றத்தினர் செய்த நல்ல காரியம்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கர்நாடக மாநிலத்தில் ரானோஜிராவ் – ராமாபாய் இருவருக்கும்  1950 ஆம் ஆண்டு, டிசம்பர் 12 ஆம் தேதி  பிறந்தவர் சிவாஜி ராவ் என்ற ரஜினிகாந்த். ரஜினியின் தந்தை  ரானோஜி ராவ் காவலராகப் பணிபுரிந்தவர். இவர் கிருஷ்ணகிரி அருகே உள்ள நாச்சி குப்பத்தில் பிறந்தவர். அவரது தாயோ, கோவையை சேர்ந்தவர். ரஜினிக்கு சத்யநாராயணா என்ற அண்ணன்  உள்ளார்.

சூப்பர் ஸ்டாரின் 70வது பிறந்தநாள் : ரஜினி மக்கள் மன்றத்தினர் செய்த நல்ல காரியம்!

சாதாரண பஸ்  கண்டக்டராக வாழ்க்கை தொடங்கிய இவருக்கு கோடம்பாக்கம் வருகை பெரும் மாற்றத்தை அளித்தது. வில்லன், குணசித்திர வேடம், ஹீரோ என முன்னேறிய ரஜினிக்கு ஏராளமான வெற்றிகளும், விருதுகளும் கிடைத்தன. 150ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் இன்னும்  தமிழ் சினிமாவின் மாபெரும் அத்தியாயமாகவே உள்ளார் ரஜினிகாந்த். தற்போது அடுத்த மாதம் அரசியல் கட்சி தொடங்குவதாக ரஜினி அறிவித்துள்ளதால் அவரது ரசிகர்கள் வழக்கத்திற்கு மாறான உற்சாகத்துடன் உள்ளனர்.

சூப்பர் ஸ்டாரின் 70வது பிறந்தநாள் : ரஜினி மக்கள் மன்றத்தினர் செய்த நல்ல காரியம்!

இந்நிலையில் ரஜினியின் 70ஆவது பிறந்தநாளை மயிலாடுதுறை மாவட்டம் சேத்திரபாலபுரம் கிராமத்தில் ரஜினி மக்கள் மன்றத்தினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். அவர்கள் பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகளையும், புரெவி புயல் மழையால் வீடுகளை இழந்த பாதிக்கப்பட்ட நலிவுற்ற மக்கள் 10 பேருக்கு நிவாரண உதவியையும் வழங்கினர்.

சூப்பர் ஸ்டாரின் 70வது பிறந்தநாள் : ரஜினி மக்கள் மன்றத்தினர் செய்த நல்ல காரியம்!

இந்த கொண்டாட்டத்தில் ரஜினி மக்கள் மன்ற நாகை மாவட்ட இணைச் செயலாளர் சுதந்திர வீரன், மாவட்டச் செயலாளர் ராஜேஸ்வரன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.