வார்னரின் கேப்டன் பதவி பறிப்பு… அணியிலும் இடமில்லை? – சன்ரைசர்ஸ் அதிரடி!

 

வார்னரின் கேப்டன் பதவி பறிப்பு… அணியிலும் இடமில்லை? – சன்ரைசர்ஸ் அதிரடி!

“இந்த ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு” என்பதைப் போலவே ஒவ்வொரு ஆட்டத்திலும் ஆடி வருகிறது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் அந்த அணிக்கு மிகவும் மோசமான தொடராக அமைந்திருக்கிறது. அணியின் கடப்பாறை பேட்ஸ்மேனாக செம ஃபார்மில் இருக்கும் வில்லியம்சனை சில போட்டிகளில் பெஞ்சில் உட்கார வைத்து செமயாக வாங்கி கட்டிக் கொண்டார் வார்னர்.

வார்னரின் கேப்டன் பதவி பறிப்பு… அணியிலும் இடமில்லை? – சன்ரைசர்ஸ் அதிரடி!

அவரை உள்ளே கொண்டு வந்த பிறகும் அணிக்குத் தோல்வியைக் கிடைத்துள்ளது. அதற்குக் காரணம் மிடில் ஆர்டரில் சொல்லிக்கொள்ளும்படியான பேட்ஸ்மேன்களை இல்லை. அந்த அணி பெயர்ஸ்டோ, வார்னர், ரஷித் கான், வில்லியம்சன் ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்களை நம்பியே இருக்கிறது. பவுலிங்கில் பெரிய புலியான ஹைதராபாத் அணி இம்முறை பூனையாகியிருக்கிறது. அனுபவ வீரர் புவனேஸ்வருக்கு காயம், நம்பிக்கை நட்சத்திரம் நடராஜனுக்கு அறுவைச் சிகிச்சை என பந்துவீச்சு தரப்பு பலமாக அடி வாங்கியிருக்கிறது.

வார்னரின் கேப்டன் பதவி பறிப்பு… அணியிலும் இடமில்லை? – சன்ரைசர்ஸ் அதிரடி!

இது ஒருபுறம் என்றால் களத்திலும் அணி தேர்விலும் வார்னர் எடுக்கும் முடிவுகள் விபரீதமாகவே முடிகிறது. நல்ல ஃபார்மில் இருக்கும் சஹாவை ஏன் பெஞ்சில் உட்கார வைத்துள்ளார்கள் என்ற கேள்விக்கு விடையே தெரியவில்லை. தேர்வாளர்கள் தன் பேச்சை கேட்பதே இல்லை என வார்னர் கடந்த போட்டிக்கு முன்பே முணுமுணுத்திருந்தார். அதேபோல பேட்டிங் ஃபிட்ச்சில் சேஸிங் எடுக்காமல் பேட்டிங்கை தேர்வு செய்திருந்தார். இதுபோன்று பல்வேறு விமர்சனங்கள் அவர் மீது எழுந்தது.

வார்னரின் கேப்டன் பதவி பறிப்பு… அணியிலும் இடமில்லை? – சன்ரைசர்ஸ் அதிரடி!

தற்போது அணி நிர்வாகம் வார்னரிடமிருந்து கேப்டன் பொறுப்பை பறித்துவிட்டது. இந்த முடிவு எதிர்பார்த்த ஒன்றே. இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அந்த அணி, “ஹைதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பை இனி கேன் வில்லியம்சன் ஏற்பார். இனி எஞ்சியிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கும் அவரே கேப்டனாக இருப்பார். இது நாளை நடைபெற இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் கேப்டனாக செயல்படுவார்.

தவிர நாளைய போட்டியிலிருந்து அணியில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் தேர்வில் அதிரடி மாற்றம் ஏற்படும். டேவிட் வார்னர் அணிக்காக பல வருடங்கள் விளையாடியிருக்கிறார். எங்களின் முடிவை அவர் நிச்சயம் புரிந்துகொள்வார். வார்னரின் பங்களிப்பு களத்திலும் களத்திற்கு வெளியேவும் இருக்கும் என நம்புகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாளைய போட்டியில் வார்னர் விளையாடுவது சந்தேகம் என்பதையே இந்த அறிவிப்பு உணர்த்துகிறது. அவருக்குப் பதிலாக ஜெசன் ராய் களமிறக்கப்படலாம் என்று தெரிகிறது.