இரண்டாவது வெற்றிக்குப் போராடும் பஞ்சாப் – இன்றாவது கிடைக்குமா? SRHvsKXIP

இரண்டாவது வெற்றிக்குப் போராடும் பஞ்சாப் – இன்றாவது கிடைக்குமா? SRHvsKXIP

ஐபிஎல் திருவிழாவில் இன்று மோதவிருக்கும் அணிகள் கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

இந்த சீசனில் பஞ்சாப் அணி 5 போட்டிகளில் ஆடி ஒன்றில் மட்டுமே வென்றிருக்கிறது. மற்ற அனைத்து அணிகளும் குறைந்தது 2 போட்டிகளில் வென்றிருக்கின்றன. அதனால், பாயிண்ட் டேபிளில் கடைசி இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியிலாவது இரண்டாவது வெற்றியைப் பெறுமா?

இரண்டாவது வெற்றிக்குப் போராடும் பஞ்சாப் – இன்றாவது கிடைக்குமா? SRHvsKXIP

பஞ்சாப் டீமின் தோல்விகளில் சில பரிதாபமானவை. முதல் போட்டியிலேயே டெல்லியோடு ஆடும்போது ஸ்கோர் சமன் என சூஉப்பர் ஓவர் மூலம் டெல்லி வென்றது. ஆனால், அம்பெயரின் தவறான கணிப்பால் ஒரு ரன் குறைக்கப்பட்டது. அது குறைக்கப்படாதிருந்தால் அன்று பஞ்சாப் வென்றிருக்கும். அடுத்து, ராஜஸ்தான் அணியோடு 223 ரன்களை அடித்தது. ஆனால், அந்த ஸ்கோரையும் கடந்து வெற்றி பெற்றது ராஜஸ்தான்.

இத்தனைக்கும் பஞ்சாப் அணியில் பிரமாதமான ஓப்பனர்ஸாக கே.எல்.ராகுலும் மயங் அகர்வாலும் இருக்கிறார்கள். ஆனால், மிடில் ஆர்டரில் பூரண் மட்டுமே அவ்வப்போது கைக்கொடுக்கிறார். மேக்ஸ்வெல் ஃபார்ம் அவுட்டில் இருக்கிறார். நீஷம் எப்போவாது ஆடுகிறார். இது பெரிய பலவீனம்.

இரண்டாவது வெற்றிக்குப் போராடும் பஞ்சாப் – இன்றாவது கிடைக்குமா? SRHvsKXIP

பவுலிங்கில் ஷமி, கட்ரெல், பிஷ்னெய், நீஷம் மூவருகே நன்றாக வீசினாலும், எப்போது ரன்களை வாரிக்கொடுப்பார்கள் என்பதே தெரியாது. ஷமி மட்டுமே இதில் ரன் ரேட்டில் கட்டுப்பாட்டில் இருக்கிறார்.

இரண்டாவது வெற்றிக்குப் போராடும் பஞ்சாப் – இன்றாவது கிடைக்குமா? SRHvsKXIP

ஹைதராபாத் அணியிலும் ஓப்பனிங்கில் வார்னர், பேர்ஸ்டோ ஜோடி அசத்துகிறது. மனிஷ் பாண்டே, கேன் வில்லியம்ஸ் நன்றாகவே ஆடி வருகிறார்கள். சென்னை மேட்சில் இளம் வீரர்கள் ப்ரியம் கார்க் மற்றும் அபிஷேக் ஷர்மா அதிரடி பார்டனர்ஷிப் போட்டு ஸ்கோரை உயர்த்தினார்கள். அவர்கள் இல்லையெனில் அன்றைய போட்டியில் ஹைதராபாத் பரிதாபமாகத் தோற்றிருக்கும்.

இரண்டாவது வெற்றிக்குப் போராடும் பஞ்சாப் – இன்றாவது கிடைக்குமா? SRHvsKXIP

பவுலிங்கில் புவனேஷ் குமார் விலகியிருப்பது பலவீனம்தான். ஆனால், ரஷித் கான், புதுமுக வீரர் அப்துல் சமது, தங்கராசு நடராஜன் ஆகியோர் கைக்கொடுப்பார்கள்.

இரண்டாவது வெற்றிக்குப் போராடும் பஞ்சாப் – இன்றாவது கிடைக்குமா? SRHvsKXIP

இன்றைய போட்டியில் பஞ்சாப் டாஸ் வின் பண்ணி, ராகுலும் மயங் அகர்வாலும் நிலைத்து ஆடி பெரிய ஸ்கோரில் நிறுத்தினால் வெற்றிக்கு வாய்ப்பிருக்கிறது.