ஐபிஎல்: கொல்கத்தா VS ஐதராபாத்! சூப்பர் ஓவரில் கொல்கத்தா அணி வெற்றி

 

ஐபிஎல்: கொல்கத்தா VS ஐதராபாத்! சூப்பர் ஓவரில் கொல்கத்தா அணி வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டின் 35வது ஆட்டத்தில் , வார்னர் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி மோர்கன் தலைமையிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் திரிபாதி களம் இறங்கினர். பவர் பிளேயில் நல்ல துவக்கம் தந்த இந்த ஜோடி 6 ஓவர்களில் 57 ரன்கள் சேர்த்தது. திரிபாதி 23 ரன்களும் , சுப்மன் கில் 36 ரன்களும் சேர்த்தனர். பின்னர் வந்த ராணா 29 ரன்களிலும் , அதிரடி வீரர் ரசல் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

ஐபிஎல்: கொல்கத்தா VS ஐதராபாத்! சூப்பர் ஓவரில் கொல்கத்தா அணி வெற்றி

கடைசி 5 ஓவர்களில் தற்போதைய கேப்டன் மோர்கன் முன்னாள் கேப்டன் கார்த்திக்கும் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினார். கார்த்திக் 29 ரன்களும் மற்றும் மோர்கன் 34 ரன்கள் சேர்த்தனர். கடைசி 5 ஓவர்களில் இருவரும் இணைந்து 58 ரன்கள் விளாசினார். 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை எட்டியது.

இதனையடுத்து களமிறங்கிய ஐதரபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பேர்ஸ்டோவும், வில்லியம்சன்னும் இறங்கினர். பேர்ஸ்டோ 36 ரன்களும் வில்லியம்சன் 29 ரன்களும் எடுத்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் வார்னர் 47 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் ஐதரபாத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து ஆட்டத்தை சமன் செய்தது. இதனால் சூப்பர் ஓவர் மூலம் ஆட்டத்தின் முடிவு தீர்மானிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.