ராஜஸ்தானை சம்பவம் செய்த தோனியின் கேம் சேஞ்சிங் மொமெண்ட் – மெர்சலான கவாஸ்கர்!

 

ராஜஸ்தானை சம்பவம் செய்த தோனியின் கேம் சேஞ்சிங் மொமெண்ட் – மெர்சலான கவாஸ்கர்!

தோனியின் ஹெலிகாப்டன் ஷாட்களும் லெக் சைடில் போட்டு பொளக்கும் ஷாட்களும் வேண்டுமானால் சோடை போகலாம். ஆனால் ஒருபோதும் அவரின் கேப்டன்ஷிப் சோடை போனதே இல்லை. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் கிரிக்கெட் உலகின் தலைசிறந்த கேப்டன் யார் என்றால் கண்ணை மூடிக்கொண்டு தோனியை நோக்கி நீட்டலாம்.

ராஜஸ்தானை சம்பவம் செய்த தோனியின் கேம் சேஞ்சிங் மொமெண்ட் – மெர்சலான கவாஸ்கர்!

களத்தில் ஒரு கேப்டனாக அவர் வகுக்கும் வியூகங்களும் ஆட்டத்தின் போக்கைக் கணிப்பதிலும் தோனிக்கு நிகர் தோனியே. Presence of mind என்று சொல்வார்கள் அது கேப்டன் கூலான நம்ம தோனிக்கு 200% பொருந்தி போகும். யாருக்கு எப்படி ஃபீல்டிங் செட் செய்ய வேண்டும். ஃபிட்ச்சின் தன்மையைப் பொறுத்து யார் கையில் பந்தைக் கொடுக்கலாம் எல்லாம் தோனிக்கு அத்துப்படி. ஒரு பேட்ஸ்மேன் தொடர்ச்சியாக ரெண்டு சிக்ஸ் அடித்தால் வேகமாக பவுலரை நோக்கிச் சென்று தோனி போடும் மந்திரம் அடுத்த பந்தில் பலித்து விடும்.

இதேபோன்றதொரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இதைப் பார்த்து முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் Impress ஆகிவிட்டாராம். நேற்றைய போட்டியில் எங்கேயோ போக வேண்டிய ஸ்கோர் தோனியின் ஆட்டத்தால் தடைப்பட்டது. 189 ரன்களை இலக்காக நிர்ணயித்தாலும் வான்கடே மாதிரியான ஃபிட்ச்சில் அது சேஸ் செய்யக் கூடிய ஸ்கோர் தான். இதே ராஜஸ்தான் ராயல்ஸ் தான் 222 ரன்களை சேஸ் செய்து 217 ரன்களின் தோல்வியைத் தழுவியது. இதனால் மிக எளிதாகவே சேஸ் செய்துவிடும் என்றே அனைவரும் நினைத்தனர்.

அவர்களின் கணிப்பைப் போலவே பட்லர் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்தார். மிக முக்கியமாக சிஎஸ்கேவின் பிரைம் பவுலரான சஹரை வதம் செய்துவிட்டார். ஸ்பின், ஃபாஸ்ட் என யாரையும் விட்டு வைக்கவில்லை. இந்தக் கனவெல்லாம் 11ஆவது ஓவர் வரை மட்டுமே நீடித்தது. அதற்குப் பின் தோனி செய்ததெல்லாம் மாயஜால வித்தைகள் ரகம். அதற்கு பட்லரும் ஒரு காரணம். (காரணம் கீழே குறிப்பிடப்படும்) 12ஆவது ஓவரை ஜடேஜா கையில் கொடுத்தார். முதல் பந்தை கிளீன் போல்டாகி வெளியேறுவார் பட்லர். அதே ஓவரில் சிவம் டுபேவையும் சேர்த்து பெவிலியன் அனுப்பி வைப்பார்.

ராஜஸ்தானை சம்பவம் செய்த தோனியின் கேம் சேஞ்சிங் மொமெண்ட் – மெர்சலான கவாஸ்கர்!

பந்து ஸ்பின்னுக்கு ஒத்துழைப்பதால் அடுத்ததாக மொயின் அலியிடம் தோனி பந்தைக் கொடுக்க டேஞ்சர் மில்லரை காலி செய்வார். அடுத்தடுத்த ஓவர்களில் கண்ணை மூடி திறப்பதற்குள் ஒட்டுமொத்த ராஜஸ்தானே காலி ஆகியிருக்கும். மொயின் அலி 2 ஓவர் வீசி மூன்று விக்கெட்டுகளைச் சாய்த்திருப்பார். 15ஆவது ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமாக ராஜஸ்தான் அணி களத்தில் நிற்கும். இப்படி தான் நேற்று ராஜஸ்தானை திட்டம் போட்டு தோனி வீழ்த்தியிருப்பார். தோனியின் இந்த வியூகத்தைச் சிலாகித்துப் பேசியிருக்கிறார் கவாஸ்கர்.

ராஜஸ்தானை சம்பவம் செய்த தோனியின் கேம் சேஞ்சிங் மொமெண்ட் – மெர்சலான கவாஸ்கர்!

அவர் கூறுகையில், “11ஆவது ஓவரில் தோனியின் பவுலிங் மாற்றத்தைக் கண்டு உண்மையாகவே திகைத்துப் போய்விட்டேன். பட்லர் அடித்த சிக்ஸரால் பந்து தொலைகிறது. புதிய பந்து (Dry ball) வருகிறது. இதுதான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது (அந்தக் காரணம் இது தான்). ஜடேஜாவிடம் பந்தைக் கொடுக்கும்போது அவர் இந்தியில் கூறுகிறார் அடுத்த பந்து Turn ஆகும் என்கிறார்.

முதல் பந்தே Turn ஆகிறது. பட்லர் கிளீன் போல்டாகிறார். பந்து நன்றாக திரும்புவதால் அது ஸ்பின்னருக்குச் சாதகமாக இருக்கும் என்பதால் அடுத்த ஓவரை மொயின் அலியிடம் கொடுக்கிறார். இதன்மூலம் தான் ஒரு ஆகச்சிறந்த கேப்டன் என்பதை மீண்டும் ஒருமுறை தோனி நிரூபித்திருக்கிறார்” என்றார்.