• February
    27
    Thursday

Main Area

Main



இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையராக சுனில் அரோரா பொறுப்பேற்பு

sunil arora
sunil arora

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் 23-வது தலைமை ஆணையராக சுனில் அரோரா இன்று பொறுப்பேற்று கொண்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் 22-வது தலைமை ஆணையாளராக கடந்த 23-1-2018 அன்று பொறுப்பேற்ற ஓ.பி.ராவத் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து, அப்பதவிக்கு தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி சுனில் அரோராவை நியமனம் செய்வதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமையகத்தில் புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா இன்று பதவியேற்று கொண்டார்.

sunil arora

கடந்த 1980ம் ஆண்டு ராஜஸ்தானில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்த இவர், தேர்தல் ஆணையத்தின் மிக மூத்த அதிகாரியாவார். அமைச்சகங்களிலும் மற்றும் நிதி, ஆடை மற்றும் திட்ட ஆணையம் போன்ற துறைகளிலும் இவர் பணியாற்றி உள்ளார்.

62 வயது நிறைந்த அரோரா, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை செயலாளர் மற்றும் திறன் வளர்ச்சி மற்றும் தொழில் முனைவோருக்கான அமைச்சகத்தில் செயலாளராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவர்.

மேலும், வரும் 2019ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தல், அதன்பின் நடக்க இருக்கும் ஜம்மு மற்றும் காஷ்மீர், ஒடிசா, மகாராஷ்டிரா, அரியானா, ஆந்திர பிரதேசம், அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகியவற்றுக்கான சட்டசபை தேர்தல்களையும் சுனில் அரோரா நடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

2018 TopTamilNews. All rights reserved.