‘ஒரு தொகுதிக்கு ரூ.30.8 லட்சம் மட்டுமே செலவு செய்ய வேண்டும்’ – தேர்தலுக்கான கட்டுப்பாடுகள் இதோ!

 

‘ஒரு தொகுதிக்கு ரூ.30.8 லட்சம் மட்டுமே செலவு செய்ய வேண்டும்’ – தேர்தலுக்கான கட்டுப்பாடுகள் இதோ!

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேதிகளை அறிவிக்க, டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறுகிறது. அதில், 5 மாநில தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தேர்தலுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து செய்தியாளர்களிடம் சுனில் அரோரா பேசியவை கீழ்கண்டவாறு;

‘ஒரு தொகுதிக்கு ரூ.30.8 லட்சம் மட்டுமே செலவு செய்ய வேண்டும்’ – தேர்தலுக்கான கட்டுப்பாடுகள் இதோ!

வாக்குப்பதிவு நேரம் 5 மாநிலங்களிலும் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் மொத்தம் 824 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தகுதி தபால் வாக்களிக்கும் முறை அமல்படுத்தப்படுகிறது. விருப்பப்பட்டால் அவர்கள் நேரில் வந்து வாக்களிக்கலாம்.

தமிழகத்தில் மொத்தம் 88, 936 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் 34.73% கூடுதலாக வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

வீடு வீடாக சென்று ஐந்து பேர் மட்டுமே தேர்தல் பரப்புரையில் ஈடுபட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வாக்குப்பதிவு மையங்களும் தரைத்தளத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வாக்குப்பதிவு மையங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

வேட்பு மனு தாக்கலின் போது இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். வேட்புமனு தாக்கலுக்கு வர அதிகபட்சம் இரண்டு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

5 மாநிலங்களிலும் 18.68 கோடி பேர் வாக்களிக்க உள்ள நிலையில் மொத்தமாக 2.7 லட்சம் வாக்குச்சாவடிகள் இருக்கிறது. பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படும். தேர்தல் பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும். வாக்குப்பதிவு மையங்களில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருக்கும்.

தமிழகத்திற்கான தேர்தல் பார்வையாளர்களாக தர்மேந்திர குமார், அலோக் வர்தன் நியமிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் தொகுதிக்கு ரூ.22 லட்சம் செலவு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. பிற மாநிலங்களில் ரூ.30.8 லட்சம் செலவு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என்று கூறினார்.