சுந்தரம் பாஸ்டெனர்ஸ் லாபம் ரூ.113 கோடி.. வருவாய் 3 மடங்குக்கு மேல் உயர்வு..

 

சுந்தரம் பாஸ்டெனர்ஸ் லாபம் ரூ.113 கோடி.. வருவாய் 3 மடங்குக்கு மேல் உயர்வு..

சுந்தரம் பாஸ்டெனர்ஸ் 2021 ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.112.55 கோடி ஈட்டியுள்ளது.

டி.வி.எஸ். குழுமத்தின் நிறுவனமான சுந்தரம் பாஸ்டெனர்ஸ் நிறுவனம் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. சுந்தரம் பாஸ்டெனர்ஸ் 2021 ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.112.55 கோடி ஈட்டியுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் சுந்தரம் பாஸ்டெனர்ஸ் நிறுவனத்துக்கு ரூ.23.48 கோடி நிகர நஷ்டத்தை சந்தித்து இருந்தது.

சுந்தரம் பாஸ்டெனர்ஸ் லாபம் ரூ.113 கோடி.. வருவாய் 3 மடங்குக்கு மேல் உயர்வு..
உதிரிபாகங்கள் தயாரிப்ப ஆலை

2021 ஜூன் காலாண்டில் சுந்தரம் பாஸ்டெனர்ஸ் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.938.81 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 3 மடங்குக்கும் அதிகமாகும். 2020 ஜூன் காலாண்டில் சுந்தரம் பாஸ்டெனர்ஸ் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.276.73 கோடி ஈட்டியிருந்தது. உள்நாட்டில் விற்பனை வாயிலாக ரூ.559.93 கோடியும், ஏற்றுமதி வாயிலாக ரூ.356.33 கோடியும் ஈட்டியுள்ளது.

சுந்தரம் பாஸ்டெனர்ஸ் லாபம் ரூ.113 கோடி.. வருவாய் 3 மடங்குக்கு மேல் உயர்வு..
டி.வி.எஸ்.

மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்த பிறகு சுந்தரம் பாஸ்டெனர்ஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.43 சதவீதம் உயர்ந்து ரூ.919.90ஆக இருந்தது.