ஞாயிறு ஸ்பெஷல் “சைவ” விருந்து!

 

ஞாயிறு ஸ்பெஷல் “சைவ” விருந்து!

ஞாயிற்றுக்கிழமை என்றால் , கொஞ்சம் ரிலாக்ஸாக சமைக்க யோசிப்போம். அசைவ பிரியர்கள் என்றால் விதவிதமாக சமைப்பார்கள். அதற்காக சைவப் பிரியர்கள் “கம்,” என்று இருந்து விட முடியுமா..? சைவப் பிரியர்களே..இந்த ஞாயிற்றுக்கிழமைக்கான சிறப்பு ‘சைவ’ச் சமையலை சமைத்து, சாப்பிட்டு குடும்பத்தோடு கொண்டாடுங்கள்.

ஞாயிறு ஸ்பெஷல் “சைவ” விருந்து!

மதிய சாதத்தை காலி ப்ளவர் பிரியாணியாகச் செய்து, அதனுடன் காரா பூந்தி தயிர் பச்சடியை தொட்டுச் சாப்பிட..ஆஹா…அருமை…அருமை

காலி ப்ளவர் பிரியாணியும்… காராபூந்தி தயிர் பச்சடியும்..

ஞாயிறு ஸ்பெஷல் “சைவ” விருந்து!

தேவை:
பாசுமதி அரிசி – 2 கப்.பெரிய,காலி ப்ளவர் – 1 நெய், எண்ணெய் – 1/2 கப்,பிரியாணி இலை – 1, பெரிய வெங்காயம் – 3,பச்சை மிளகாய் – 5,தக்காளி – 2, பட்டை – 3, ஏலக்காய் – 2, இஞ்சி,பூண்டு, பேஸ்ட் – 2 டீஸ்பூன்,புதினா – 1 கப்,கொத்தமல்லி – 1/2 கப், தயிர் – 1/2 கப்,வத்தல் பவுடர் – 1 டீஸ்பூன்,கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்,உப்பு – தேவைக்கு,தேங்காய்ப்பால் – 2 கப்…

செய்முறை: காலிப்ளவரை பெரிய துண்டுகளாக நறுக்கி வெது வெதுப்பான நீரில் 10 நிமிடம் வைத்து கழுவிய பின் உபயோகிக்கவும்.குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய் சேர்த்து அதில் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி பின் தக்காளி, இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து பின் புதினா, கொத்தமல்லி, காலி பிளவர், தயிர் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் வத்தல் பவுடர், கரம் மசாலா, உப்பு, தேங்காய்ப்பால் சேர்த்து அதனுடன் அரிசியை சேர்க்கவும். மிதமான சூட்டில் ஒரு விசில் வரும் வரை வைத்து இறக்கினால் சுவையான காலிப்ளவர் பிரியாணி தயார்.

ஞாயிறு ஸ்பெஷல் “சைவ” விருந்து!

காரப்பூந்தி தயிர் பச்சடி

தேவை: தயிர் – 1 கப்,காரப்பூந்தி – 100 கிராம், பச்சை மிளகாய் – 2,சாம்பார் வெங்காயம் – 10,எண்ணெய், கடுகு, உப்பு, கறிவேப்பிலை – தேவையான அளவு,சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்.
செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். பின் பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும். சாம்பார் பொடி சேர்த்து கிளறவும். ஒரு பாத்திரத்தில் தயிரை சேர்த்து அதனுடன் வதக்கிய கலவை, கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும். பரிமாறும் நேரத்தில் அதனுடன் காரப்பூந்தியைக் கலந்து பரிமாறவும்.

  • இர. அகிலா போஸ்