நாளை இரண்டாவது ஞாயிறு! முழு ஊரடங்கிற்கு தயாரா? என்னென்ன கட்டுப்பாடுகள்…

 

நாளை இரண்டாவது ஞாயிறு! முழு ஊரடங்கிற்கு தயாரா? என்னென்ன கட்டுப்பாடுகள்…

தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஜூலை 31 ஆம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 5-7-2020, 12-7-2020, 19-7-2020 மற்றும் 26-7-2020 ஆகிய தேதிகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது.

நாளை இரண்டாவது ஞாயிறு! முழு ஊரடங்கிற்கு தயாரா? என்னென்ன கட்டுப்பாடுகள்…

அதன்படி, முதல் ஞாயிறான கடந்த 5ஆம் தேதி மாநிலம் தழுவிய முழு ஊரடங்கு கடைபிடிக்கப் பட்டது. இந்நிலையில், இம்மாதத்தின் இரண்டாவது ஞாயிறான நாளை, மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய தேவைகளான பால் கடைகள், மருந்தகங்கள் மட்டுமே நாளை இயங்கும். காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், உணவகங்கள் உட்பட அனைத்து கடைகளும் நாளை மூடப்பட்டிருக்கும். இதேபோல் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளும் நாளை திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.