• November
    20
    Wednesday

Main Area

Main



சம்பளமே போதும்ங்க, இங்க்ரீமென்ட் வேணாம்! - என்னா மனுசன்யா! சுந்தர் பிச்சை!

Sundar Pichai
Sundar Pichai

அலுவலகத்தில் அப்ரைசல் மீட்டிங் என்று வந்துவிட்டால், எக்ஸ்ட்ராவாக சில ஆயிரங்களை வாங்குவதற்குள் நாக்கு தள்ளிவிடுகிறது சிலருக்கு. இந்த ஆஃபிஸ்க்காக நாயா பேயா உழைக்கிறேன், ஆனா இன்க்ரிமென்ட்ன்னு வந்துட்டா மட்டும் மருமகளை பாக்குற மாமியார் மாதிரி நடந்துக்கிறாங்க, இதெல்லாம் ஒரு ஆஃபிஸா என்பது எல்லா அலுவலகத்திலும் நடக்கிற விஷயம்தான். அப்ரைசல் நல்லபடியாக நடந்துமுடிகிற வரையில் ஹெச்.ஆருக்கு ரெண்டுதடவை குட் மார்னிங்கெல்லாம் சொல்லித் தொலைய வேண்டியிருக்கிறது. ஆனா, சுந்தர் பிச்சைக்கு அப்படி இல்லை. மேலதிகாரிகளே முன்வந்து வழங்கிய போனஸை வேண்டாம் என சொல்லியிருக்கிறார். போனஸ் தொகை எவ்வளவு தெரியுமா? ஒன்றல்ல ரெண்டல்ல 400 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வேண்டாமென சொல்லியிருக்கிறார்.

Sundar Pichai

நான்கு வருடங்களுக்கு முன்பு கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றபோது, 1750 கோடி ரூபாய்க்கு மதிப்புப்பெற்ற கூகுள் நிறுவனத்தின் பங்குகளையும், 2015ஆம் ஆண்டு 700 கோடி மதிப்புள்ள பங்குகளையும், 2016ஆம் ஆண்டு 1400 கோடி மதிப்புள்ள பங்குகளையும் போனஸாக பெற்றிருந்தார் சுந்தர் பிச்சை. பிச்சையின் நிர்வாக திறமையைப் பாராட்டி இந்த வருடம் தோராயமாக 400 கோடி ரூபாய் மதிப்புபுள்ள பங்குகளை கூகுள் நிறுவனத்தின் தாய்க்கழகமான ஆல்ஃபாபெட் வழங்க முன்வந்தது. அதற்கு சுந்தர் பிச்சை "ஏற்கெனவே எனக்கு தேவைக்கும் அதிகமான பணம் சேர்ந்துவிட்டது, எனவே இந்த போனஸ் வேண்டாம் என பெருந்தன்மையாக மறுத்துவிட்டார்.

இந்த 400 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்று பணமாக்கினால், நாளொன்றுக்கு ஒரு கோடிக்கும் சற்று கூடுதலாகவே செலவு செய்யலாம். ஒரு நாளைக்கு ஒரு கோடி!!!! கேக்கவே ஜிவ்வ்வ்வ்னு இருக்குல்ல? முப்பது ரூவா சார், முப்பது ரூவா கூடுதலா குடுத்தா நானெல்லாம் மூணு நாளைக்கு கண்ணு முழிச்சி வேலை செய்வேன்!


 

2018 TopTamilNews. All rights reserved.