சிறப்பான செயல் திறனின் பலன்… ரூ.1,813 கோடி லாபம் சம்பாதித்த சன் பார்மா

சிறப்பான செயல் திறனின் பலன்… ரூ.1,813 கோடி லாபம் சம்பாதித்த சன் பார்மா

சன் பார்மா நிறுவனம் 2020 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.1,813 கோடி ஈட்டியுள்ளது.

மருந்து துறையை சேர்ந்த சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் (சன் பார்மா) நிறுவனம் தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. சன் பார்மா நிறுவனத்தின் நிதி முடிவுகள் நிபுணர்களின் எதிர்பார்ப்புகளை காட்டிலும் நன்றாக இருந்தது. சிறப்பான செயல் திறன் மற்றும் கிரெடிட் போன்றவற்றால் சன்பார்மா நிறுவனத்தின் லாபம் அதிகரித்துள்ளது.

சிறப்பான செயல் திறனின் பலன்… ரூ.1,813 கோடி லாபம் சம்பாதித்த சன் பார்மா
சன் பார்மா

சன் பார்மா நிறுவனம் 2020 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.1,813 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 70.4 சதவீதம் அதிகமாகும். 2019 செப்டம்பர் காலாண்டில் சன் பார்மா நிறுவனம் ஒட்டு மொத்த நிகர லாபமாக ரூ.1,064 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது.

சிறப்பான செயல் திறனின் பலன்… ரூ.1,813 கோடி லாபம் சம்பாதித்த சன் பார்மா
மாத்திரைகள்

2020 செப்டம்பர் காலாண்டில் சன் பார்மா நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான ஒட்டு மொத்த வருவாய் ரூ.8,553 கோடியாக உயர்ந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 5.3 சதவீதம் அதிகமாகும். மும்பை பங்குச் சந்தையில் நேற்று சன் பார்மா நிறுவன பங்கின் விலை 3.39 சதவீதம் அதிகரித்து ரூ.485.10ஆக உயர்ந்தது.