சன் பார்மா லாபம் இரு மடங்கு அதிகரிப்பு… இடைக்கால டிவிடெண்டு அறிவிப்பு

சன் பார்மா லாபம் இரு மடங்கு அதிகரிப்பு… இடைக்கால டிவிடெண்டு அறிவிப்பு

சன் பார்மா 2020 டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.1,852.5 கோடி ஈட்டியுள்ளது.

மருந்து துறையை சேர்ந்த சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் (சன் பார்மா) நிறுவனம் தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. சன் பார்மா நிறுவனத்தின் நிதி முடிவுகள் நிபுணர்களின் எதிர்பார்ப்புகளை காட்டிலும் நன்றாக இருந்தது. வருவாய் மற்றும் இதர வருவாய் அதிகரிப்பால் சன்பார்மா நிறுவனத்தின் லாபம் அதிகரித்துள்ளது.

சன் பார்மா லாபம் இரு மடங்கு அதிகரிப்பு… இடைக்கால டிவிடெண்டு அறிவிப்பு
சன் பார்மா

சன் பார்மா 2020 டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.1,852.5 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் இரு மடங்குக்கும் அதிகமாகும். 2019 டிசம்பர் காலாண்டில் சன்பார்மா நிறுவனம் நிகர லாபமாக ரூ.913.50 கோடி ஈட்டியிருந்தது. 2020 டிசம்பர் காலாண்டில் சன் பார்மா நிறுவனத்தின் வருவாய் 8.4 சதவீதம் உயர்ந்து ரூ.8,837 கோடியாக அதிகரித்துள்ளது.

சன் பார்மா லாபம் இரு மடங்கு அதிகரிப்பு… இடைக்கால டிவிடெண்டு அறிவிப்பு
சன் பார்மா

2020 டிசம்பர் காலாண்டில் சன் பார்மா நிறுவனத்தின் இதர வருவாயாக ரூ.315 கோடி ஈட்டியுள்ளது. 2019 டிசம்பர் காலாண்டில் சன்பார்மா நிறுவனம் இதர வருவாயாக ரூ.120 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது. சன் பார்மா நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.5.50ஐ இடைக்கால டிவிடெண்டாக அறிவித்துள்ளது.