22 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் …10 மாவட்டங்களில் மழை!!

 

22 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் …10 மாவட்டங்களில் மழை!!

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் நாளை முதல் வெயில் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

22 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் …10 மாவட்டங்களில் மழை!!

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி ,திருநெல்வேலி, தென்காசி, மற்றும் தூத்துக்குடி ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் நாளை முதல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் …10 மாவட்டங்களில் மழை!!

சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு ,ராணிப்பேட்டை, வேலூர் ,திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ,கடலூர் ,பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ,தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.