சும்மா கிடைக்கிற சூரிய ஒளியில் இவ்ளோ நன்மையா ?இதை படிங்க ..

 

சும்மா கிடைக்கிற சூரிய ஒளியில் இவ்ளோ நன்மையா ?இதை படிங்க ..

வைட்டமின் டி உடலுக்கு பல நன்மைகளை தருகிறது – உங்கள் எலும்புகள், தசைகள் மற்றும் பற்களை வலுப்படுத்துவதிலிருந்து வலுவான நோய் எதிர்ப்பு சக்தியைப் பராமரிக்க உதவுகிறது . நீங்கள் வெயிலில் போகும் போது இயற்கையாகவே வைட்டமின் கிடைக்கிறது ! இருப்பினும், நகரமயமாக்கல் மற்றும் வாழ்க்கை முறையால் , உடலுக்கு தேவையான சூரிய ஒளி நமக்கு கிடைக்காமல் போகலாம்.

சும்மா கிடைக்கிற சூரிய ஒளியில் இவ்ளோ நன்மையா ?இதை படிங்க ..


இந்தியா ஏராளமான சூரிய ஒளி கொண்ட வெப்பமண்டல நாடாக இருந்தாலும், வைட்டமின் டி குறைபாடு இந்தியர்களிடையே பரவலாக உள்ளது. ஜலந்தரின் கார்டியன் மருத்துவமனையின் டாக்டர் சஞ்சீவ் கோயல், நடத்திய ஆய்வில், இந்திய மக்கள் தொகையில் 76 சதவீதம் பேர் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் ., இந்த குறைபாடு 18-30 வயதுடைய இந்தியர்களிடையே 82.5 சதவீத விகிதத்தில் அதிகம் காணப்படுகிறது.
இந்த கண்டுபிடிப்பு குறித்து அபோட் மருத்துவ இயக்குநர் டாக்டர் ஸ்ரீரூபா தாஸ் கூறுகையில், “வைட்டமின் டி குறைபாடு வயதானவர்களுக்கு மட்டுமல்ல, இளையவர்களுக்கும் இருப்பது கவலை அளிக்கிறது என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. இது அனைவருக்கும் ஆபத்து. வைட்டமின் டி குறைபாடு இருதய நோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு தொடர்பான பிற நோய்களுடன் தொடர்புடையது. வைட்டமின் டி இன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது,”என்றார்
உங்கள் வைட்டமின்-டி உட்கொள்ளலை அதிகரிக்க உடனடியாக செயல்படுத்த சில எளிதான, குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது .

சூரிய ஒளியில் நீங்கள் செல்வதை அதிகரிக்கவும், . மதியம் 35-40 நிமிடங்கள் சூரிய ஒளி நேரடியாக உடலில் படுவது சிறந்தது. மொட்டை மாடி அல்லது பால்கனியில் ஒரு வசதியான இடத்தில நீங்கள் இருக்கலாம், அப்போது நீங்கள் உங்கள் மடிக்கணினியை எடுத்துச் சென்று ஒரு புதிய சூழலில் தொடர்ந்து பணியாற்றலாம், அல்லது ஓய்வு நேரத்தில் ஒரு புத்தகத்தைப் படிக்கலாம், இதனால் உங்கள் உடல்நலத்திற்கு தேவைகளை சூரிய ஒளியை பெற்று வளமாக வாழலாம்

வீட்டிற்குள்ளிருக்கும் வாழ்க்கை முறை உங்கள் வைட்டமின் டி அளவைக் குறைக்கும், மேலும் உடல் பருமன் ஏற்படலாம். வழக்கமாக நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், யோகா செய்வது அல்லது வெய்யிலில் உடற்பயிற்சி செய்வது உங்களுக்கு போதுமான சூரிய ஒளியை கொடுப்பதோடு மட்டுமல்லாமல், ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும் உதவும் .

சும்மா கிடைக்கிற சூரிய ஒளியில் இவ்ளோ நன்மையா ?இதை படிங்க ..